Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா நேற்றிலிருந்து பிக் பாஸ் 8 ரசிகர்களிடம் படாத பாடுபட்டு வருகிறார்.
சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தவர் அர்ச்சனா. இரண்டு மூன்று நாட்களாக கண்ணீரும் கம்பளையுமாக சுற்றிவிட்டு அடுத்து நின்னு அடிச்சதெல்லாம் சிக்ஸர் தான்.
அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே அவர் சீரியல் நடிகர் அருணை காதலிக்கிறார் என செய்திகள் வெளியானது.
இவர்கள் இருவரும் சேர்ந்து கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட வெளியானது.
ராணவ் கையை உடைச்சதே உங்க மேன் தான்
இதைத் தொடர்ந்து எட்டாவது சீசனில் அருண் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மனுஷன் உள்ள என்னதான் பண்றாரு எனத் தோன்றியது.
இப்போ கொஞ்ச நேரம் எதுவுமே பண்ணாம சும்மா இரு என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.
10 பேரு ஆமான்னு சொல்ற விஷயத்தை ஒருத்தன் இல்லைன்னு சொன்னா ஹீரோ என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
எல்லாரும் அர்ச்சனா ஆகிட முடியுமா என இணையவாசிகள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நேற்றைய தினம் ஒரு டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ராணவ் கையில் அடிபட்டது.
அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது எல்லோருமே சும்மா நடிக்கிறான் என்று சொன்னார்கள். ஆனால் அருண் தான் அவரே தூக்கி என்னடா ஆச்சு என கேட்டார்.
அதன் பின்னர் அவர் மருத்துவர் இடமும் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கிளிப்பை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தட் மை மேன் என எழுதியிருந்தார் அர்ச்சனா.
நிகழ்ச்சியை 24/7 லைவில் பார்த்துவிட்டு ராணவ் கையை உடைத்ததே அருண் தான் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மேடம் அவர் கையை உடைச்சதே உங்க மேன் தான் என ட்ரோல் செய்து வருகிறார்கள்.