புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இது ஜெயிலரா இல்ல விக்ரம் ரீமேக்கா.. இப்படி வசமா மாட்டிக்கிட்டீங்களே நெல்சன்!

Jailer Showcase: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் நேற்றிலிருந்து இந்த படத்தை பயங்கர வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் இந்த வீடியோவை வைத்து பாதிப்பேர் படத்தின் கதை என்ன என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிக்கு கடந்த சில படங்கள் சரியாக போகாததால், ஜெயிலர் படத்தை மிகப்பெரிய அளவில் நம்பி கொண்டு இருக்கிறார். மேலும் இயக்குனர் நெல்சனுக்கும் இந்த படம் அவருடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படம். இதனால் இவர்கள் இருவருமே இந்த படத்திற்காக தங்களுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறார்கள்.

Also Read:24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

நேற்றைய தினம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதிலிருந்து பலரும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் நெட்டிசன்கள் படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் படத்தின் பல காட்சிகள் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தை தழுவி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மனைவி, மகன், பேரன் என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி ஏதோ ஒரு காரணத்தால் அதிரடி ஆக்சனில் இறங்குவது போல் இந்த ட்ரெய்லர் காட்டப்பட்டிருக்கிறது. மேலும் ரஜினிக்கு பெரிய அளவில் பிளாஷ்பேக் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரஜினியின் மகன் போலீசாக இருக்கிறார். ரஜினி பிளாஷ்பேக்கில் ஜெயிலராக வருகிறார்.

Also Read:ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்.. லியோவை மொத்தமாய் முடித்துவிட்ட ஜெயிலர் வீடியோ

கமலின் விக்ரம் படத்தில் அவர் காவல்துறையை சேர்ந்த ஏஜென்ட் ஆக இருப்பார். அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம் போலீசாக இருப்பார். மகனை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கேரக்டரில் கமல் நடித்திருப்பார். இருந்தாலும் ஒரு கட்டத்தில் கமல் யார், அவர் இதற்கு முன்பு என்னவாக இருந்தார் என்பது போல் பிளாஷ்பேக் இருக்கும்.

நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் சரியாக போகாததால், ஏற்கனவே ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் அடித்த விக்ரம் படத்தின் கதையையே அப்படியே கொஞ்சம் உல்ட்டாவாக மாற்றி கொடுத்து இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பட ரிலிசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படம் வெளியான பிறகு தான் உண்மை கதை என்னவென்று தெரியும்.

Also Read:ஜெயிலர் பட வசூலை தடுக்க போடும் ஸ்கெட்ச்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா, கேளுங்க தளபதி

Trending News