வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

சினிமா விமர்சனம் என்பது முன்பை போல இல்லாமல் இப்போது யார் வேண்டுமானாலும் ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம் என்பது போல் ஆகிவிட்டது. பேஸ்புக் விமர்சனம், டிவிட்டர் விமர்சனம், இன்ஸ்டாகிராம் விமர்சனம் என ஒவ்வொரு படமும் பல விமர்சனங்களை தாண்டி தான் பல நேரங்களில் மக்களை சென்றடைகிறது.

இப்போது சினிமா விமர்சனத்தை ட்ரோல் மூலம் கூட பல யூடியூப் சேனல்கள் விமர்சனம் செய்கின்றன. சினிமா விமர்சனத்திற்கு பல யூடியூப் சேனல்கள் இருந்தாலும் மக்கள் விரும்பி பார்ப்பது ஒரு சில சேனல்களை தான். அந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான விமர்சனத்தின் மூலம் பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். ஆனால் இவருடைய திரை விமர்சனம் ஒரு மாதிரி மரியாதை குறைவாகத் தான் இருக்கும்.

Also Read: வில்லாதி வில்லனாக ரஜினி நடித்த 6 படங்கள்.. பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கிய பாலச்சந்தர்

மாறன் எப்போதுமே ஒரு படத்தின் எதிர்மறை விமர்சனங்களை கொஞ்சம் தரக்குறைவாகவே கூறுவார். இறுதியில் 1,2 பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்லி நான் உண்மையை தான் சொல்லுவேன் என்பது போல் காட்டிக் கொள்வார். பல நேரங்களில் இவருடைய விமர்சனம் ரொம்பவும் தரம் தாழ்ந்து உருவக்கேலி வரை சென்றுவிடும். இவருடைய விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட படங்களும், நடிகர்களும் அதிகம் உண்டு.

இவருடைய விமர்சனங்கள் இப்படி இருந்தாலும், ரசிகர்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனால் இவரும் விமர்சனம் எப்படியிருக்கிறது என்று பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். தங்களுக்கு பிடிக்காத நடிகரை பற்றி இவர் கேலி செய்தால் அதை பயங்கர ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள். அதுவே பிடித்த நடிகரை பற்றி நெகடிவாக பேசினார் என்றால் மீம்ஸ், ட்ரோல்கள் மூலம் மாறனை கிழித்து தொங்கவிட்டு விடுவார்கள்.

Also Read: டிசம்பர் 12 பிறந்தநாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான்

அப்படி ப்ளூ சட்டை மாறன் இந்த முறை சிக்கியிருப்பது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களிடம். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 20 வருடங்களுக்கு முன் வெளியான அவருடைய பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் நையாண்டியாக விமர்சனம் செய்து தான் இப்போது வசமாக மாட்டிக் கொண்டார்.

ஏற்கனவே இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்து வம்புக்கு இழுத்திருந்தார். அதேபோல் இப்பொழுது ரஜினியின் பாபா படத்தை பேசி வம்புக்கு இழுக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் செலிபிரிட்டிகள் அனைவரும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

Also Read: படம் பார்க்க மட்டும் நாங்கள் வேண்டுமா.? ஏமாற்றத்தைக் கொடுத்த ரஜினிகாந்த்

Trending News