வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூர்யா சினிமா கேரியரை மொத்தமா முடிச்சு விட்டதே ஜோதிகா தானாமே!.. அடுக்கடுக்காய் சொல்லப்படும் காரணங்கள்!

Jyotika: ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய நடிகை ஜோதிகா. அதிலும் திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த படங்களாக இருக்கட்டும், கொடுத்த பேட்டிகளாக இருக்கட்டும் திருஷ்டி சுத்தி போடும் அளவுக்கு இருந்தது.

ஒவ்வொரு மேடைக்கும் மங்களகரமாக புடவை கட்டிக்கொண்டு வந்து சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றி ஜோதிகா பேசுவதை கேட்பதற்கு அவ்வளவு அலாதியாக இருந்தது. திடீரென சமூக வலைத்தளங்களில் ஜோதிகா மீது பல நெகடிவ் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

அடுக்கடுக்காய் சொல்லப்படும் காரணங்கள்!

இது எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று பார்த்தால் ஜோதிகாவின் மும்பை குடியேற்றம் தான். ஒரு பக்கம் அவர் என்னதான் அப்பா அம்மா, பிள்ளைகள் என்ற காரணம் சொன்னாலும் ஜோதிகாவுக்கு பாலிவுட் ஆசை வந்துவிட்டது என முத்திரை குத்தப்படுகிறது.

அதற்கு ஏற்ற மாதிரி ஜோதிகா அடுத்தடுத்து மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். இந்த படங்களின் பிரமோஷன் களில் கலந்து கொண்ட ஜோதிகா தமிழ் சினிமா பற்றி கொஞ்சம் குறைவாக பேசியதாக தெரிகிறது.

அதாவது தன்னையும் சூர்யாவையும் வைத்து படம் எடுக்க தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு புத்தி இல்லை என்று ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அதேபோல நடிகர் மம்மூட்டி தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு மரியாதை என்பதை பற்றி பேசி இருந்தார்.

ஆனால் தமிழ் சினிமா ஹீரோக்களை பற்றி எதுவுமே பெரிதாக பேசவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு சரியான கேரக்டர்கள் கொடுக்க யாரும் முன் வரவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். ஜோதிகாவின் முக்கிய பிரதானம் பாலிவுட் சினிமாவாக இருந்தாலும்.

சூர்யாவுக்கு அப்படி இல்லை சூர்யாவுக்கு தமிழ் சினிமா தான் மொத்தமும். அப்படி இருக்கும்போது ஜோதிகா ஒவ்வொரு இடத்திலும் மற்ற மொழி படங்களை உயர்த்தும்போது இங்கே சூர்யாவின் மதிப்பு படிப்படியாக குறைவதாக இணையவாசிகள் தற்போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News