ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 16, 2025

நடிச்ச படம் தான் பெயிலியர் மத்தபடி ரெஜினா லக்கி சார்ம் தான்.. அஜித் முதல் SK வரை, நல்ல கதையா இருக்கே!

Regina Casandra: தமிழில் பிரசன்னா மற்றும் லைலா இணைந்து நடித்த கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமானார் ரெஜினா.

ஹோம்லி, கிளாமர் என அத்தனையிலும் கால் பதித்து விட்டார். இருந்தாலும் ரெஜினா நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வி தான் அடைந்திருக்கின்றன.

அப்படி இருக்கும் பட்சத்தில் ரெஜினா பற்றி இணையதள வாசிகள் ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

லக்கி சார்ம் ரெஜினா

அதாவது ரெஜினா மிகவும் அதிர்ஷ்டமான நடிகை. அவருடன் பணிபுரியும் நடிகர்கள் மிகப்பெரிய இடத்தை அடைந்து விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் ரெஜினா உடன் பணிபுரிந்து இருப்பார். இந்த படப்பிடிப்பு சமயத்தில் தான் அஜித் கார் ரேஸ் கம்பெனிக்கு ஓனர் ஆனது.

அதே மாதிரி நடிகர் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் ரெஜினா உடன் நடித்திருப்பார்.

தற்போது அடுத்த தளபதி என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் ரெஜினா உடன் இணைந்து பணிபுரிந்தார்.

தற்போது இந்திய அளவிலேயே நடிகர்கள் சேர்ந்து பணிபுரிய ஆசைப்படும் இயக்குனர் ஆகிவிட்டார்.

அதேபோன்று உதயநிதி நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தில் ரெஜினா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிவிட்டதாக கிளப்பி விட்டு இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

Trending News