Rajinikanth – Surya: ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகுக்கும் நேற்றைய தினம் கருப்பு நாள் என்று சொல்லலாம். சினிமாவில் கடின உழைப்பால் முன்னேறிய இயக்குனர் மற்றும் நடிகர் மாரிமுத்து, 57வது வயதில் நேற்று மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருடைய உடலுக்கு சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாய் வாழ்ந்த மாரி முத்து சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 30 வருடங்களாய் வெள்ளி திரையில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் சமீபத்தில் நிறைய பெரிய ஹீரோக்களின் படங்களிலும் முக்கியமான கேரக்டர்களின் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு திரை பிரபலங்கள் நிறைய பேர் பரிட்சயம்.
Also Read:திருமணத்திற்கு பின் உதவி செய்வதை கைவிட்ட அஜித்.. உண்மையான காரணத்தை கூறிய ஜெயிலர் பட நடிகர்
நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிறைய திரை பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மாரிமுத்துவின் நினைவலைகளை பகிர்ந்திருந்தார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் பணி புரிந்திருந்தார். இதனால் ரஜினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மாரிமுத்துவின் இறப்பு குறித்த இரங்கல் செய்தியை பகிர்ந்திருந்தார்.
அதேபோன்று நடிகர் சூர்யா நடித்த முதல் படமான நேருக்கு நேர் படத்திலும் மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். இதனால் சூர்யாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். இவர்களுடைய பதிவின் கீழ் விஜய்யின் விசுவாசிகள் செய்த கமெண்ட்டுகள் பார்ப்பவர்களை ரொம்பவும் முகம் சுளிக்கும் அளவிற்கு செய்திருந்தது.
ரஜினி சூர்யா பதிவிற்கு போடப்பட்ட கமெண்ட்கள்

ஒரு மிகப்பெரிய கலைஞனின் மறைவிற்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் பொழுது, அதிலும் தங்களுடைய வன்மத்தை இவர்கள் கக்கி இருப்பது ரொம்பவும் மட்டமான வேலையாக தான் தெரிகிறது. இது விஜயின் பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது.
நடிகர் விஜய் இது போன்ற விஷயங்களுக்கு எத்தனையோ மேடைகளில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் கூட சமூக வலைத்தளங்களில் வரம்பு மீறி எந்த கருத்தையும் பதிவிட கூடாது என அவருடைய மக்கள் இயக்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது விஜய்க்கு விசுவாசம் காட்டுகிறேன் என்ற பெயரில் அவருடைய பெயருக்கு கலங்கம்விளைவித்து கொண்டு இருக்கிறார்கள்.
Also Read:சினிமாவுக்கு வரவே கூடாது, சினிமா உனக்கு வேண்டாம்.. மாரிமுத்து மகனை தடுக்க இப்படி ஒரு காரணமா?