Vijay: தமிழக வெற்றி கழகம் கட்சி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் பேசிய நிறைய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
அதில் முக்கியமான ஒன்றுதான் அவருடைய ஸ்லீப்பர் செல்கள் பற்றி பேசி இருந்தது.
இரண்டு கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் உள்ளே நுழைந்து #TVKforTN என்பதை நம்பர் ஒன் இடத்தில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். இந்த விஷயத்தை விஜய் ரொம்பவே ரசித்தபடி பேசி இருந்தார்.
டிவிட்டரில் ஏற்பட்ட சலசலப்பு
ஒரு சில டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் விஜய் இடம் ஒரு முக்கிய கேள்வியை முன்னெடுத்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் #TVKforTN என்பதை மட்டும் ட்ரெண்ட் செய்யவில்லை. இதற்கு முன்பாக எத்தனையோ ஹீரோக்களை பற்றியும் அவர்களுடைய குடும்பங்களை பற்றியும் தப்பு தப்பாக பேசி இருக்கிறார்கள்.
மோசமான விஷயத்தை ட்ரெண்டாக்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் பார்த்து ரசித்து கொண்டு தான் இருந்தீர்களா. இனியும் இப்படி செய்யுங்கள் என ஊக்கப்படுத்துகிறீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார்கள்.