Pa.Ranjith: பா ரஞ்சித் சினிமாவை தாண்டி பல விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதில் தற்போது அவர் சென்னையில் நடந்த உணவு திருவிழாவில் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.
அதாவது அந்த உணவு திருவிழாவில் பல்வேறு உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மாட்டிறைச்சி மட்டும் இல்லை.
உணவில் எதற்காக பாகுபாடு காட்ட வேண்டும். மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள் பலபேர் இருக்கின்றனர் என நீலம் பண்பாட்டு மையம் சார்பாக தன் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் நெட்டிசன்கள் சில கேள்வியை கேட்டுள்ளனர். அதாவது நீங்கள் குரல் கொடுப்பது எல்லாமே ஒருவித அரசியல் தான்.
பா ரஞ்சித்துக்கு சுட சுட ஒரு கேள்வி பார்சல்
மாட்டிறைச்சி குறித்து கேள்வி கேட்டது எல்லாமே நல்ல விஷயம் தான். ஆனால் பன்றி இறைச்சியை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கவில்லை.
எதற்கெடுத்தாலும் நசுக்கிட்டாங்க பிதுக்கிடாங்க என சொல்பவர்கள் இந்த புறக்கணிப்பை ஏன் பேசவில்லை. இதற்காகவும் கொஞ்சம் பேசுங்க ரஞ்சித் என நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி இதை வைத்து தான் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என ரஞ்சித்துக்கு எதிரான கருத்துகளும் பரவி வருகிறது.
மேலும் அந்த உணவு திருவிழாவில் 17ஆம் நம்பர் ஸ்டாலில் பீப் இறைச்சி விற்கப்பட்டு வருகிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால் தங்கள் கண்டனத்திற்கு பிறகு தான் அந்த கடை திறக்கப்பட்டுள்ளதாக ஒரு ரஞ்சித் தெரிவித்துள்ளார்.