Aishwarya Rai – Abishek Bachchan: ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வாங்கி 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்று வரை உலக அழகி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா மட்டும்தான். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட போது, பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மருமகளாக ஆகிவிட்டார் உலக அழகி என ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. பெரிய இடத்து மருமகளாக ஆகிவிட்டார் உலக அழகி என்று நினைத்தாலும், அதன் பின்னர் நடந்த நிறைய நிகழ்வுகளில் இந்த தம்பதிகளை ஒன்றாக பார்க்கும் பொழுது ஐஸ்வர்யா உண்மையாகவே சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எல்லோருக்குமே எழுந்தது.
அபிஷேக் பச்சன் நிறைய நிகழ்வுகளில் மீடியாவுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்தும்படி நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளின் போது ஐஸ்வர்யா அழுது கொண்டு எல்லாம் சென்ற வீடியோக்கள் வைரலாகி இருக்கிறது. அபிஷேக் பச்சன் சாதாரண நடிகராக இருக்கும் பொழுது, ஐஸ்வர்யா மீது இருக்கும் உலக அழகி என்ற புகழ் வெளிச்சம் அவருக்கு சங்கடமாக இருந்தது தான் இதற்கு காரணம் என நிறைய மீடியாக்கள் பேசி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளுக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் வாழ்த்து சொல்லி இருந்தனர். அதே நேரத்தில் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனின் வாழ்த்து எப்படி இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவின் பழைய போட்டோ ஒன்றை பிளாக் அண்ட் ஒயிட்டில் போட்டுவிட்டு ஹாப்பி பர்த்டே என்று பதிவிட்டிருந்தார்.
அபிஷேக் பச்சன் போட்டிருக்கும் பதிவு

இதற்கு நெட்டிசன்கள் பலரும், ஐஸ்வர்யா ராய் போன்ற ஒரு நடிகைக்கு அவருடைய ரசிகர்களே என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அவருடைய கணவரான நீங்கள், ஒரு இரண்டு வார்த்தை அவரைப் பற்றி எழுதி இருக்கக் கூடாதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கலாம் என்றும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை மகள் ஆராத்யா மற்றும் அம்மாவுடன் கொண்டாடி இருக்கிறார். இதனால் இந்த தம்பதிகளுக்குள் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்குமா என்று கூட சந்தேகம் வலுக்கிறது. ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக எத்தனையோ பேர் தவம் கிடந்தார்கள். ஆனால் உலக அழகியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு இதுதான் நிலைமை என அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
Also Read:பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்