Chennai Rain: சென்னையில் நேற்றில் இருந்து மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆபீஸ் செல்பவர்களும் வெளியில் வர முடியாத அளவுக்கு கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பத்திரப்படுத்தி வருகின்றனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக வேளச்சேரி மக்கள் செய்த அலப்பறை தான் ஒட்டு மொத்த மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதாவது மழை ஆரம்பிப்பதற்கு முன்பே கார் உரிமையாளர்கள் கார்களை வேளச்சேரி பாலத்தில் கொண்டு வந்து பார்க் செய்ய தொடங்கிவிட்டனர். நேற்று மதியத்திற்கு மேல் ஒவ்வொருவரும் தங்கள் வாகனங்களை பார்க் செய்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
போக்குவரத்து போலீஸ் சொல்லியும் கூட கேட்காத மக்கள் அபராதம் கூட போட்டுக்கோங்க காரை எடுக்க மாட்டோம் என பிடிவாதமாக நின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது எதற்கும் வேளச்சேரி மக்கள் அசரவில்லை. இதற்கு முக்கிய காரணம் போன வருட மழையில் ஏகப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது. லட்ச கணக்கில் கொடுத்து வாங்கிய காரை ஆயிரக்கணக்கில் செலவு செய்து சரி செய்யும் நிலைமைக்கு வந்தனர் உரிமையாளர்கள்.
காருக்கு 50000 கொடுப்பதற்கு பதில் நாங்கள் பைன் கட்டி விடுவோம் என சிலர் ஓப்பன் ஆக சொல்லி வருகின்றனர். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அதனால் இப்போது வேளச்சேரி கார் பார்க்கிங் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் இதோ.