வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடுத்த விவாகரத்து ராக்காயி தான்.. ஆஹா கிளம்பிட்டாங்கப்பா, உஷாரா இருங்க நயன்

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என கெத்தாக வலம் வந்த நயன்தாரா இப்போது சோஷியல் மீடியாவில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். தனுஷை சீண்டி பார்த்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த ஒரு சம்பவமே அவருடைய பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறது. அவர் ரொம்பவும் திமிர் பிடித்தவர், ஆணவக்காரி, வன்ம குடோன் என ரசிகர்களும் இஷ்டத்திற்கு அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தும் கூட மீண்டும் அவர் தனுஷை மறைமுகமாக தாக்கி நன்றி அறிக்கை வெளியிட்டது இன்னும் கொதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் நெட்டிசன்களுக்கு இப்போது அவர்தான் என்டர்டைன்மென்ட் ஆக மாறி இருக்கிறார்.

அதிலும் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமண விழாவில் தனுஷ், நயன், சிவகார்த்திகேயன் என பலர் பங்கேற்றனர். அப்போது தனுசுக்கு பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த நயன் கால் மேல் கால் போட்டு நீலாம்பரி ரேஞ்சுக்கு அமர்ந்திருந்தார்.

அடுத்த விவாகரத்து நயன்தாராவா.?

ஆனால் அதையெல்லாம் கண்டுக்காத தனுஷ் வழக்கம் போல சைலன்ட் மோடில் இருந்தார். இதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதை எல்லாம் தாண்டி கோலிவுட்டின் அடுத்த விவாகரத்து தம்பதி நயன் விக்கி தான் என்றும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வருடம் ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ ஆர் ரகுமான் என பலர் தங்கள் விவாகரத்தை அறிவித்து விட்டனர். இந்த சூழலில் நயன்தாராவின் விவாகரத்தும் ரொம்ப தூரத்தில் இல்லை. விரைவில் இந்த ஜோடி பிரிவார்கள் என இணையவாசிகள் சாபம் கொடுக்காத குறையாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த கமெண்ட்டுக்கு முக்கிய காரணம் நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் விக்னேஷ் சிவன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் நயன் நான் எப்படி உட்கார வேண்டும் என்று கூட சொல்வார் என குறிப்பிட்டு இருந்தார்.

இதிலிருந்து நயன்தாரா எந்த அளவுக்கு டாமினேட் என தெரிகிறது. புருஷனை டம்மி பீஸ் ஆக வைத்திருக்கிறார் என வெளிப்படையான கருத்துக்களும் கிளம்பியது. அதனாலேயே அடுத்த விவாகரத்து ஜோடி என கொளுத்தி போட்டு விட்டனர். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க நயன்.

Trending News