திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது. அதனாலேயே அவருடைய அடுத்த படம் எப்படி இருக்கும், எப்போது தொடங்கப்படும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.

ak62-title
ak62-title

அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்கள் ஏகே 62 அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் இயக்குனர் மாற்றத்தின் காரணமாக அந்த படத்தின் அறிவிப்பு பல மாதங்களாக தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் சோர்வடைந்தாலும் அஜித்தின் பிறந்தநாளான இன்று எப்படியும் சர்ப்ரைஸ் வரும் என்று காத்திருந்தனர்.

Also read: விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

அந்த காத்திருப்புக்கு பலனாக தற்போது ஏகே 62 டைட்டிலை லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை பார்த்த அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் மிகவும் கெத்தாகவும், பவர்ஃபுல்லாகவும் டைட்டில் வரும் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவருக்கும் இருந்தது.

title-ak62-troll
title-ak62-troll

ஆனால் டிவியில் வரும் ராசிபலன் போன்று இருக்கும் இந்த டைட்டிலை தற்போது சோசியல் மீடியாவில் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் டைட்டிலை பார்த்து சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கண்ணீருடன் இருப்பது போன்ற மீம்ஸ் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

troll-memes
troll-memes

Also read: AK 52,62 என ட்விட்டரை ஆக்கிரமித்த அஜித்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் அஜித் ஃபேன்ஸ்

அதைத்தொடர்ந்து போக்கிரி படத்தில் வரும் வடிவேலுவின் போட்டோவை போட்டு, இது தமிழ் காலண்டர்ல வர ராசிபலன் டா என்றும் கலாய்த்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் இதற்கு வாரிசு என்ற டைட்டிலே பரவாயில்லை என ரவுண்டு கட்டி கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

vidamuyarchi-memes
vidamuyarchi-memes

இதனால் அஜித் ரசிகர்கள் தான் பாவம் நொந்து போய் இருக்கின்றனர். இருந்தாலும் இந்த கேலி, கிண்டலுக்கு அவர்கள் தகுந்த பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இத்தனை மாதங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டைட்டில் அஜித் ரசிகர்களுக்கே கூட ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

memes-ak62
memes-ak62

Also read: அஜித்தை திருப்திப்படுத்த முடியாத 4 இயக்குனர்கள்.. மகிழ்திருமேனியால் இழுத்தடிக்கும் ஏகே 62

Trending News