சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சூர்யவம்சம் சின்ராசு போல மைக்கை பிடித்ததும் கிரிஞ்சு பண்ணிய நயன்.. பிசினஸ ஓட்ட என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு

Nayanthara: ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடப்பட்ட சூர்ய வம்சம் படம் இப்போது 2கே கிட்ஸ்களால் கிரிஞ் என கலாய்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த சூர்ய வம்சம் படத்தையே ரீ கிரியேஷன் செய்து நெட்டிசன்கள் இடையே பல்பு வாங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மைக் கிடைத்ததும் சூர்ய வம்சம் படம் சின்ராசு போல் மாறி அவர் பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

உதவாக்கரை என அப்பாவால் ஒதுக்கப்படும் சின்ராசு ஒரே பாட்டில் பெரிய பஸ் கம்பெனியை ஆரம்பித்து விழா கொண்டாடுவார். அந்த விழாவில் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் கலந்து கொள்வார்கள். அந்த மேடையில் பேசும் சின்ராசு அவருடைய அப்பா தான் இது எல்லாத்துக்கும் காரணம், உளியோட வலிய தாங்குனா தான் சிலை உருவாகும் என பேசி இருக்கும் டயலாக் இப்போது நயன்தாராவால் பயங்கர ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறது.

நயன்தாரா இப்படி இறங்கி வந்து மேடையில் மணிக்கணக்காக பேசியதை பார்க்கும் பொழுது ஒரு பிசினஸ ஓட்ட என்னெல்லாம் பண்ண வேண்டி இருக்கிறது நம்ம தலைவி என தோன்றுகிறது. நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை, அதனால் நான் பிரமோஷன்களுக்கு போவது இல்லை என நயன் தன்னுடைய அர்த்தமில்லாத கொள்கையை தைரியமாக சொன்னவர். அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய நல்ல ப்ராடக்டுக்காக ஏன் இந்த அளவுக்கு இறங்கி வந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.

Also Read:தொடர்ந்து 11 படங்கள் பிளாப் கொடுத்த நயன்தாரா.. பட்டத்தை பறிக்க போகும் அந்த நடிகை

கடந்த விஜயதசமி தினத்தன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து பெமி9 என்னும் நாப்கின் பிசினஸை தொடங்கியிருந்தார்கள். இதற்கான சிறப்பு விழா ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பச்சை கலர் புடவையில் மங்களகரமாக நயன்தாரா மைக் முன்னாடி வந்து நின்றதும் அரங்கமே அதிர்ந்து விட்டது. அதிலும் நயன்தாரா பேசுவதற்கு முன் அவருடைய சூப்பர் ஹிட் பாட்டான ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க ஐயா பட செல்வி கண் முன் வந்து போனார்.

கிரிஞ்சு பண்ணிய நயன்தாரா

தன்னுடைய நாப்கின் ப்ராடக்ட்டை பற்றி பேச வந்த நயன்தாரா, ஒட்டுமொத்தமாக தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டு விழாவாக அந்த நிகழ்ச்சியை மாற்றிவிட்டார். விக்னேஷ் சிவன் வந்ததால் தான் என் வாழ்க்கை ஒளிமயமானது, அவரால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன், என்னுடைய வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முழுமுதற்காரணமே என்னுடைய கணவர் தான் அவருக்கு சிறப்பு நன்றி என பாராட்டி தள்ளிவிட்டார்.

பொதுவாக இப்படி ஏதாவது ஒரு மேடை கிடைத்தால் சூர்யா மற்றும் ஜோதிகா தான் முன்பெல்லாம் இந்த வேலையை பார்ப்பார்கள். அதே ரூட்டை நயன்தாரா இப்போது ஃபாலோ செய்ய ஆரம்பித்து இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் மைக்கை பிடித்து பேசிய பேச்சு அப்படியே ஒரு நிமிடம் சூர்ய வம்சம் சின்ராசுவை கண்முன் கண்டு வந்து நிறுத்திவிட்டு போனது. விக்னேஷ் சிவனும் கீழே அமர்ந்து கொண்டு கூச்சமே இல்லாமல் அசடு வழிந்து கொண்டிருந்தார்.

Also Read:அந்த கேரக்டர் பண்ணினது தப்பு என இதுவரை புலம்பும் 5 நடிகைகள்.. நயன்தாரா வெறுத்து ஒதுக்கிய படம்

Trending News