ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சமந்தாவை விட படு கிளாமராக நடித்திருக்கும் சோபிதா.. நாக சைதன்யா உடனான நிச்சயதார்தத்துக்கு பின் வைரலாகும் வீடியோ

Naga Chaitanya: நாக சைதன்யா மற்றும் சோபித்தாவுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நாக சைதன்யா, சமந்தா ஜோடி சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் கொண்டாடப்பட்டது.

இவர்களுடைய விவாகரத்து எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதைவிட பல மடங்கு நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் ஏற்படுத்தி இருக்கிறது. சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து வருவதாக கடந்த வருடத்திலிருந்து செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு நாகார்ஜுனா வீட்டில் ரொம்பவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடத்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா தம்பதி விவாகரத்து பெற்றதற்கு முழுக்க முழுக்க சமந்தா தான் காரணம் என சொல்லப்பட்டது.

சமந்தா திருமணத்திற்கு பிறகு கிளாமராக நடிக்க ஆரம்பித்தது தான் பிரச்சனை, அதிலும் ஃபேமிலி மேன் படத்தில் அதிக கிளாமராக நடித்திருந்தார். இது நாகார்ஜுனா குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது எனவும் சொல்லப்பட்டது.

இப்போது விவாகரத்தான ஒரு சில வருடங்களிலேயே நாக சைதன்யா காதல் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டதால் இப்போது விவாகரத்துக்கு காரணமாக இவர் தான் இருந்திருக்கிறார் என நெகட்டிவ் விமர்சனங்கள் உருவாக ஆரம்பித்து விட்டது.

அது மட்டும் இல்லாமல், நாக சைதன்யா- சமந்தா தம்பதி மீது அதே அன்பு வைத்திருந்த இணையவாசிகள் தற்போது அவர்களுடைய மொத்த கோவத்தையும் சோபிதா மீது காட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமந்தா கிளாமராக நடித்தது தான் பிரச்சனை என்றால், அப்போ சோபிதா மட்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் சோபிதா கிளாமராக நடித்த படங்களின் வீடியோக்களையும் டிரெண்டாக்கி வருகிறார்கள். இந்த ட்ரெண்டில் சிக்கி இருப்பது சோபிதா நடித்த விளம்பரம் ஒன்று. நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா சில வருடங்களுக்கு முன் நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்த விளம்பரம் பார்ப்பதற்கே முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கிறது. சோபிதா இணைந்திருக்கும் உடை மட்டுமின்றி, அவர் முகத்தில் கொடுக்கும் ரியாக்சன்கள் பார்ப்பதற்கே கொடுமையாக இருக்கிறது. என்னதான் காண்டம் விளம்பரம் என்றாலும் இந்த அளவுக்கு நடிக்க வேண்டுமா, இதை விடவா மோசமாக சமந்தா நடித்து விட்டார் என இணையவாசிகள் தங்களுடைய ஆதங்கத்தையும் கொட்டி வருகிறார்கள்.

இன்னும் சில சில்மிஷவாதிகள் நாக சைதன்யா ரொம்பவும் கொடுத்து வைத்தவர் என நக்கலாகவும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ

Shobitha ad
Shobitha ad
Shobitha ad
Shobitha ad
Shobitha ad
Shobitha ad


Trending News