வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

Vijay TV: மண்டையில் இருந்த கொண்டையை மறந்த விஜய் டிவி சீரியல்கள்.. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம ஏமாத்துறாங்க!

Vijay TV: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு கூட சொல்லுவாங்க. இந்த சீரியல்களில் நடக்கும் அக்கப்போர் நாளுக்கு நாள் தாங்க முடியவில்லை. முன்னாடியெல்லாம் சீரியல்களில் ஒரு சீன் வந்தால் அதை அப்படியே மக்கள் பார்த்துவிட்டு விட்டு விடுவார்கள்.

ஆனால் இப்போதைக்கு நிலவரம் வேற. ஒரு சின்ன சீன் நெருடலாக தெரிந்தாலும் உடனே அதைப்பற்றி சமூக வலைதளத்தில் பேசி பெரிய விஷயம் ஆக்கிவிடுவார்கள். அப்படி இந்த வாரம் இணையவாசிகளிடம் சிக்கியது விஜய் டிவி சீரியல்கள் தான். கண்டன்டு இல்லை என்பதற்காக கதையை உருட்டுவது ஒரு விதம்.

பயங்கரமாக சொதப்பி விட்டு மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என நினைப்பது இன்னொரு விதம். விஜய் டிவி சீரியல்கள் அப்படித்தான் சொத்தை இப்போது வசமாக சுத்தி இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் தற்போதைக்கு நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீரியல் சிறகடிக்கும் ஆசை. முத்து மற்றும் மீனாவிற்காகத்தான் முதலில் இந்த சீரியலை மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த சீரியலில் மனோஜ் மற்றும் ரோகினி ஜீவாவை கண்டுபிடித்து 27 லட்சத்திற்கும் வட்டி போட்டு 30 லட்சமாக கேட்டிருப்பார்கள்.

கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம ஏமாத்துறாங்க!

உடனே ஜீவாவின் பிளைட்டுக்கு லேட் ஆகுதுன்னு சொல்லி அசால்டாக ஒரு நிமிஷத்தில் போனிலிருந்து 30 லட்சம் ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்து விடுவார். இதெல்லாம் நம்பற கதையாவா இருக்கு. ஒரே நேரத்தில் 30 லட்சத்தை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்பர் செய்ய முடியுமா என்ன.

டெக்னாலஜிக்கு சவால் விட்டு பார்த்திருக்கிறார் இந்த சீரியலின் இயக்குனர். அது மட்டுமா வீட்டுக்கு வந்ததும் ரோகிணி மாமியாரிடம் எங்க அப்பா மாமா கிட்ட இந்த காசை கொடுத்து விட்டிருக்கிறார் என்று சொல்ல, ஏன் இதை மலேசியாவில் இருந்து வரும்போது எடுத்துட்டு வர முடியாதா என்று முத்து கேப்பாரு.

அதுக்கு ரோகிணி அசால்ட் ஆக அவ்வளவு காசு எல்லாம் விமானத்தில் எடுத்துட்டு வர முடியாதுன்னு சொல்லி இருக்கும். சரியான டாக்குமெண்ட் இருந்தால் எவ்வளவு காசு வேணா எடுத்துட்டு வரலாமே அப்படின்னு ஒரு கேள்வி கேட்க அந்த வீட்டில் ஆள் இல்லாமல் போனது தான் ஆச்சரியம்.

என்ன தப்பு பண்ணினாலும் மாட்டாத ரோகினியை பார்க்கும்போது மக்கு சீரியல் பார்ப்பவர்களா, இல்ல சீரியலின் இயக்குனரா என்ற தான் தெரியவில்லை. இந்த எல்லா சீரியல்களுக்கும் ஒரு படி மேல பாக்கியலட்சுமி.

ஐம்பது வயதில் இரண்டாவது திருமணம் செய்து, ராதிகாவை கர்ப்பம் ஆகிவிட்டு அதை பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் கோபி. இன்னொரு பக்கம் பழனிச்சாமி கலர் கலராக டிரஸ் போட்டுக் கொண்டு பாக்யாவுக்கு ரூட் விடுகிறார். பழனிச்சாமியின் சகோதரி மகனுடன் அடுத்து இனியாவுக்கு ஒரு லவ் ட்ராக் வேற காத்து கிடக்குது.

அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேசன் சுடுகாடு வரை கொண்டு சென்ற காட்சி எல்லாம் மக்கள் பார்த்ததை மறந்து விட்டு மீண்டும் அவரை உயிரோடு கொண்டு வந்த இயக்குனர் ஜகஜால கில்லாடி தான். ஆகா கல்யாணம் சீரியலில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக பொய் சொன்னதை வளைகாப்பில் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இப்போ எல்லாம் கர்ப்பமான உடன் மாசத்துக்கு ஒரு ஸ்கேன், வாரத்துக்கு ஒரு செக்கப் என்று போய்க்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில் கர்ப்பமாக இருப்பதை ஒன்பது மாசம் வரை பொய் சொல்லி ஏமாற்ற முடியும் என்றால் நாடகம் பார்க்கிற நம்ம தான் தலையில அடிச்சுக்கணும். எல்லாம் பார்க்கும் போது போக்கிரி பட காமெடி சீனில் மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டியே என்று வடிவேலுவிடம் கேட்பதுதான் ஞாபகம் வருகிறது

Trending News