இதற்கு நயன்தாராவே விளம்பரங்களில் நடித்து பிரமோஷன் செய்து வருகிறார். இது பெண்கள் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்கள் அடங்கி உள்ளது. அதேபோல் தான் சின்னத்திரை நடிகை கன்னிகாவும் ஒரு பிசினஸ் தொடங்கி இருக்கிறார்.
பாடலாசிரியர் ஆன சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார்.
சினேகன் மற்றும் கனிகா இருவருக்குமே வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் புரிந்து அன்னியோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள். சினேகன் சினிமாவில் ஒரு புறம் சம்பாதித்து வந்தாலும் தனது மனைவியுடன் சேர்ந்து சில விஷயங்களை செய்து வருகிறார்.
சினேகன் ஹெர்ப்ஸ் தொடங்கிய கன்னிகா
இவர்கள் இருவரும் யூடியூப் தொடங்கி அதன் மூலம் சம்பாதித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கன்னிகா சிறந்த ஓவியர் என்பதால் ஓவியங்களை வரைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். இப்போது இவர்கள் சினேகம் ஹெர்பஸ் என்ற புதிய பிராண்ட் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.
இது ஹெர்பல் ஹேர் ஆயில் பிராண்ட். அதாவது நடிகை கன்னிகாவுக்கு அதிக கூந்தல் உள்ள நிலையில் அதை நன்றாக பராமரித்து வருகிறார். இப்போது அதையே பிசினஸாக்கி உள்ளனர் அந்த தம்பதியினர்.
அதாவது கூந்தல் வளர்ச்சிக்கான இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஆயிலை விற்பனை செய்து வருகின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு போட்டியாக கன்னிகா சினேகன் வந்துவிடுவார் போல என்று கூறி வருகின்றனர்.