விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா. அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவருடைய சமையல் பேசப்பட்டதோ இல்லையோ கோமாளி பாலா- ரித்திகா காம்போ ரசிகர்களிடம் பெரிதும் பிரபலமானது.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் இரண்டாவது செல்லம் மகனான எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கின்ற முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் அமிர்தா ஏற்கனவே திருமணமாகி தன்னுடைய கணவனை இழந்த விதவையாக, தன்னுடைய மாமனார் மாமியார் அரவணைப்பில் ஒரு பெண் குழந்தையை கையில் வைத்திருக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
சின்னத்திரையில் சீரியல் நடிப்பதன் மூலம் தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண நிலையில் இருக்கும் ரித்திகாவிற்கு கார் எல்லாம் கனவாக இருந்து இருந்ததாம். ஆனால் தற்போது ரித்திகா புதிய ஹூண்டாய் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த புதிய கார் உடன் மனவளர்ச்சி குன்றிய தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக எடுத்திருக்கும் புகைப்படத்தை ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் ரித்திகாவிற்கு சோஷியல் மீடியாவின் மூலம் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.