திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ஜெயம் ரவி பெயரை கெடுக்க பழி போடும் ஆர்த்தி.. விவாகரத்து பின்னணி என்ன.? ஆதாரத்தோடு கிழியும் முகத்திரை

Jayam Ravi: சோசியல் மீடியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றிய பேச்சாக இருக்கிறது. யூட்யூப் சேனல்களில் கூட பத்திரிகையாளர்கள் தங்களுக்கு தெரிந்த கதைகளையும் யூகங்களையும் சொல்லி பரபரப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பெரும் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அதாவது இது முழுக்க முழுக்க என் கணவரின் முடிவு தான். இந்த விவாகரத்து பற்றி எனக்கு தெரியவே தெரியாது.

அவரை சந்தித்து பேசுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது என ஒரு நீண்ட அறிக்கையை விட்டு பிரச்சனையை ஜெயம் ரவியின் பக்கம் திருப்பி இருக்கிறார். ஏனென்றால் இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு ஆர்த்தி மீதுதான் அனைவரின் குற்றச்சாட்டும் இருந்தது.

மேலும் அவருடைய அம்மா ஜெயம் ரவியை கொடுமைப்படுத்தியதாகவும் கூட சிலர் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அதை தவிர்க்க தான் ஜெயம் ரவி மீது ஆர்த்தி பழி போடுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு ஆதாரமும் இருக்கிறது.

ஆர்த்தியின் குற்றச்சாட்டு

அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த செய்தி மீடியாவில் வைரலானது.. விரைவில் விவாகரத்து அறிவிப்பு வரும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. அந்த சூடு அணையும் முன்பே ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட அத்தனை போட்டோவையும் டெலிட் செய்தார்.

இது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியது. அவர் நினைத்திருந்தால் அப்போதே இது வெறும் வதந்தி தான் என இப்போது போல் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு ஜெயம் ரவி அறிவித்த பிறகு தன் மறுப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுவே சந்தேகத்தை கிளப்புகிறது. மேலும் இந்த விவகாரம் அவ்வளவு எளிதில் முடியும் பிரச்சனையாக தெரியவில்லை. நிச்சயம் ஆர்த்தியின் இந்த பதிவுக்கு பிறகு பல விஷயங்கள் வெளியில் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

கடந்த இரு நாட்களாக ஆர்த்தி பற்றி பேசிய மீடியாக்கள் இப்போது ஜெயம் ரவியின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். ஆனால் அவர் மீது தவறு கிடையாது எங்கள் சப்போர்ட் ஜெயம் ரவிக்கு தான் என ரசிகர்கள் இப்போது மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். பார்ப்போம் இன்னும் என்னென்ன பூதம் கிளம்புகிறது என்று.

ஜெயம் ரவியை பழிவாங்கத் துடிக்கிறாரா ஆர்த்தி.?

Trending News