ஒருவழியா முடிவுக்கு வந்த சூர்யா-பாலா பஞ்சாயத்து.. படக்குழு போட்ட பலே திட்டம்

இயக்குனர் பாலா, சூர்யா இடையேயான பிரச்சனை சமீபத்தில் இணையத்தில் பூதாகரமாக வெடித்தது. சூர்யாவின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கியவர் பாலா. இப்படங்களின் மூலம்தான் அப்போது சூர்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது .

தற்போது சூர்யாவின் 41ஆவது படத்தை இயக்கும் பாலா இப்படத்தின் படப்பிடிப்பை கன்னியாகுமரியில் நடத்தி வந்தார். அப்போது பாலா, சூர்யா இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சூர்யா சென்றுவிட்டார் என்ற செய்தி வெளியானது.

அதாவது சூர்யா தற்போது மாஸ் நடிகராக உள்ளார். பழையபடி அவரை அதட்டி, உருட்டி எல்லாம் வேலை வாங்க முடியாது. ஆனால் பாலா தனக்கு மனதிருப்தியாக இருந்தால் மட்டுமே அடுத்த காட்சிக்கு செல்லுவார். இதனால்தான் இவர்கள் இடையே ஏதோ பிரச்சனை வந்து சூர்யா உடனே பேக்கப் சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது

மேலும் தொடர்ந்து பாலா, சூர்யா இடையே சண்டை வருவதால் இப்படத்தின் ஷூட்டிங் நின்றுவிட்டது என்றும் இனிமேல் ஷூட்டிங்கே நடக்காது எனவும் பேச்சுகள் அடிபட்டு வந்தது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூன் 9 ஆம் தேதி தொடங்கயுள்ளது.

ஆனால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கோவாவில் ஷூட்டிங் நடத்தினால் பெரிய அளவில் செலவாகும். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது சூர்யா, பாலா இடையே பிரச்சனை வந்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்த அதிக வாய்ப்புள்ளது.

இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதையெல்லாம் மனதில் நினைத்த சென்னையிலேயே அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம். எப்படியும் பிரச்சனை வரும் என்பது உறுதி, அதிலிருந்து செலவாவது குறைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி உள்ளனர் படக்குழுவினர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →