வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சன் டிவி டிஆர்பி-க்கு எதிராக விஜய் டிவி தொடங்கும் புது ரியாலிட்டி ஷோ.. மாஸாக என்டரி கொடுக்கும் KPY பாலா

New reality show launched by Vijay TV: இரு துருவங்களாக ஒன்றுக்கொன்று சலிச்சவங்க இல்ல என்று சொல்வதற்கு ஏற்ப சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இவர்களுக்கிடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதால் புதுப்புது நிகழ்ச்சிகளை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மற்ற சேனல்களில் யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை மடக்கி தன்னுடைய சேனலில் வைத்து டிஆர்பி ரேட்டிங்கே கூட்டுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு சீசன்களை தாண்டி ஐந்தாவது சீசன்களாக அடி எடுத்து வரும் குக்கு வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டுப்பு குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட் கம்மியாகி சன் டிவியில் அதிகரித்து விட்டது.

விஜய் டிவி துவங்கும் புது ரியாலிட்டி ஷோ

அதனால் தற்போது சன் டிவிக்கு எதிராக விஜய் டிவி புது ரியாலிட்டி ஷோவை கொண்டு வரப் போகிறார்கள். பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது டிக் டிக் டிக் என்ற நிகழ்ச்சி தொடங்கப் போகிறது.

இதை தொகுத்து வழங்குவதற்காக கலைஞர் சேனலில் பல வருடங்களாக தொகுப்பாளனியாக இருந்த சாந்தனு மனைவி கீர்த்தி விஜய் டிவியில் ஆரம்பிக்கப்படும் டிக் டிக் டிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இவருடன் சேர்ந்து மாஸாக என்டரி கொடுக்கப் போகிறது KPY பாலா.

KPY பாலா பொறுத்தவரை கிடைக்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பணம் சம்பாதித்து இல்லாத மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் மக்களிடம் இவருக்கு என்று ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டார். தற்போது இவரை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினால் கண்டிப்பாக மக்களிடத்திலிருந்து பேர் ஆதரவு கிடைக்கும் என்று விஜய் டிவி கொத்தாக அவரை தூக்கி விட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று சொல்லவில்லை. ஆனால் சன் டிவி டிஆர்பி-க்கு எதிராக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News