வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

படம் ஓட்டியே காதலியை மடக்கிய காதல் மன்னன்.. சிம்பு கதை மாதிரியே இருக்கே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் அனைவரையும் இப்படி ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும் என பொறாமைப்படும் அளவுக்கு எழிலில் கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அத்துடன் இந்த சீரியலில் பாக்யாவை கணவர், மகள், மாமனார்,மாமியார், மகன் உள்ளிட்ட அனைவரும் மட்டம் தட்டி தரக்குறைவாக நடத்தினாலும் எழில் மட்டும் தன்னுடைய அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பான்.

அத்துடன் எழில் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபோது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கேலி செய்தாலும் பாக்யா மட்டும் எழிலின் திறமையை ஊக்குவித்தாள். அதன் விளைவாக தற்போது படத்தை உருவாக்கி அதில் நவ ரசத்தையும் பார்ப்போருக்கு வெளிக்காட்டும் விதத்தில் சூப்பர் டூப்பர் படத்தை எழுதி இயக்கி அதை தன் குடும்பத்திற்கு போட்டு காட்டுகிறார்.

அப்போது அமிர்தாவும் அவருடைய குடும்பத்துடன் வந்திருக்கிறார். எழிலின் காதலை தொடக்கத்தில் மறுத்த அமிர்தா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எழிலை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.

அதுமட்டுமின்றி எழில் தற்போது இயக்கியிருக்கும் படத்திலும் வரும் டயலாக் அனைத்தும் அமிர்தாவின் காதலைத் தூண்டி விடும் அளவிற்கு இருப்பதால், இந்தப் படத்தை பார்த்துவிட்டு எழில் இடம் அமிர்தா தன்னுடைய காதலை வெளிப்படுத்த போகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு, த்ரிஷா ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட காதல் கதை போலவே இந்த சீரியல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு எழில் தன்னுடைய குடும்பத்தினரிடம் அமிர்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் வாங்கப் போகிறான். இது ஒரு புறமிருக்க கோபி ராதிகாவிடம் நிரந்தரமாக சேர்ந்து வாழ எடுக்கப்போகும் முடிவை பாக்யாவின் குடும்பம் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News