UPI-ல் புதிய விதிகள்.. ரிசர்வ் பேங்க் முன்மொழிந்த 3 மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா?

UPI
UPI

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை இந்தியாவில் அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் தன் நேரமும் காலமும் விரயமானது தடுக்கப்படுகிறது. முதலில் பணம் போடுவது, எடுப்பது, இதற்கெல்லாம் ஒரு அரை நாளையாவது செலவு செய்ய நெரிட்டு வந்த நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் இதெல்லாம் சுலபமாக்கப்பட்டது.

அனைத்து மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து உலகின் எப்பகுதியில் இருப்பவருக்கும் பணம் அனுப்ப வ்சதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில், பாரத், பேடிஎம், போன் பே, இப்போ பே ஆகியவைகள் முன்னணியில் உள்ளன.

இந்திய ரிவர்வ் வங்கியின் முன்மொழிவு

இந்த நிலையில், இப்பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்திய ரிவர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் நிலையில், யுபிஐ சேவை தொடர்பான 3 முக்கிய அம்சங்கள் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட் பிளாட்பார்மில் பெரிய மாற்றங்கள் நடக்கும். அதில், யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்படும். யுபிஐ லைட் சேவையின் கீழ் பயனர் ஒவ்வொருவரும் ரூ.500 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ரிசர்வ் வங்கி யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.

அடுத்து, யுபிஐ லைட் வாலட் வரம்பு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் பேலன்ஸ் வைத்திருக்க முடியும். யுபிஐ லைட் வாலட்டின் தினசரி செலவு வரம்பு என்பது ரூ. 4 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேனுவலாக டாப் அப் தேவையில்லை

இதையடுத்து, நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு யுபிஐ லைட் பேலன்ஸ் ஒரு குறிப்பிட்ட வரம்பிக்குக் கீழே செல்லும்பட்சத்தில், புதிய ஆட்டோ டாப் – அப் மூலம் யுபிஐ லை-ல் மீண்டும் பணம் சேர்க்கப்படும் எனவும் இனிமேல் மேனுவலாக டாப் அப் செய்ய தேவையிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுபிஐ பரிவர்த்தனையில் பின் நம்பவரை சிறிய அளவிலான பர்வர்த்தனைகளுக்கு அனுமதிக்கும் யுபிஐ லைட் வாலட்டை அடிக்கட்டி நிரம்ப வேண்டியிருக்கிறது. இதற்காக, பயனர்கள் தம் வங்கிக் கணக்கில் இருந்து வாலட் பேலன்ஸை கைமுறையில் நிரம்பும் வகையில் இருப்பதால், புதிய ஆட்டோ டாப் அப்பின் மூலம் இவை மாறவுள்ளது.

யுபிஐ செயல்முறையை நெறிப்படுத்தும் வகையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நேசனல் பேமண்ட்ஸ் கார்பரேசன் தெரிவித்த நிலையில், ரீசார்ஜ் செய்வதற்கான தேவையை நீக்கவுள்ளது. இதை நினைவூட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தெதி என்பிசிஐ அறிவிப்பின்போது, யுபிஐ லைட் ஆட்டோ பே பேலன்ஸ் அம்சம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Advertisement Amazon Prime Banner