வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எரிகிற தீயில் பெட்ரோல ஊத்திட்டாங்கலே.. எப்படி இருந்த கேப்ரில்லா இப்படி ஆயிட்டாங்க

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஈரமான ரோஜாவே சீசன் 2. இத்தொடரில் முதல் முறையாக கேப்ரில்லா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்தார்த், ஸ்வாதி, திரவியம் ஆகியோர் இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்தொடரில் திருமணத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில குழப்பத்தின் காரணமாக கல்யாணம் ஆக இருந்த ஜோடி மற்றும் காதலித்த ஜோடி என இரு ஜோடிகளுக்கும் பிடிக்காத படி திருமணம் ஆனது. அதாவது சித்தார்த்துக்கு கேப்ரில்லாவுடனும், திரவியத்திற்கு சுவாதி உடனும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஸ்வாதி இருவரும் ஓரளவு மனதை மாற்றிக்கொண்டு இதுதான் வாழ்க்கை என வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் திரவியம் மற்றும் கேப்ரியல்லா இருவரும் காதலை மறக்க முடியாமல் வெறுமையாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த குடும்பத்தில் தனது அக்காவுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கேப்ரியல்லா அவர்களை தட்டிக் கேட்கிறார். இந்நிலையில் கேப்ரில்லா, சுவாதி, திரவியம் மூவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது சுவாதி எங்கேயோ சென்று இருக்கும்போது திரவியம் மற்றும் கேப்ரியல்லா பார்த்த அவரது தோழிகள், இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதாக நினைத்து வாழ்த்து கூறுகிறார்கள்.

மேலும் பல வருடமாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என கூறுகிறார்கள். ஏற்கனவே இருவரும் பிரிந்த மன கஷ்டத்தில் உள்ள நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல அவர்கள் நண்பர்கள் இவர்களை வாழ்த்தியது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.

அப்போது சுவாதி அங்கு வந்த திரவியத்திற்கு திருநீரை பூசிவிடுகிறாள். இந்நிலையில் கேப்ரில்லா தனது மனதை மாற்றிக் கொண்டு சித்தார்த்துடன் வாழ ஆரம்பிப்பாரா என்ற பெரிய கேள்விக் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இத்தொடரில் பல புதிய திருப்பங்கள் தர காத்திருக்கிறது.

Trending News