ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தளபதி 69க்கு வெளிவரும் புது அப்டேட்.. ஹீரோயின், வில்லன் யார் தெரியுமா?

தளபதி 69 படம் அக்டோபர் மூன்றாம் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. சினிமாவை விட்டு விலக போகுது விஜய் நடிக்கும் கடைசி படம் இது. அதனால் இந்த படத்துக்கு இப்பவே பெரிய எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. விஜய்யின் அரசியல் சம்பந்தமான வேலைகளையும் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்க இருக்கிறது.இந்த படத்தை பற்றி முக்கியமான அப்டேட் இன்று வருகிறது. இப்பொழுது இந்த படத்தின் ஹீரோ மற்றும் வில்லன் யார் என்பது தெரியவந்துள்ளது.

தளபதி 69 படத்திற்காக பயனூரில் ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து வருகிறார்கள். அக்டோபர் 3 அங்கே தான் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் சிம்ரன், சமந்தா, பிரேமலு பட ஹீரோயின் மம்தா பஜ்லு நடிக்க போகிறார்கள் என்றெல்லாம் கூறிவந்த நிலையில் இப்பொழுது ஹீரோயினை தேர்ந்தெடுத்து விட்டனர்.

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தான் இப்பொழுது இந்த படத்துக்கு ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே இவர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார். அது போக ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் காஞ்சனா 4 படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

அது மட்டும் இல்லை இந்த படத்துக்கு வில்லனாக ஹாலிவுட் புகழ் பாபி டியோல் கமிட்டாகி இருக்கிறார். சூர்யா நடிக்கும் சங்குவா படத்தில் இவர்தான் வில்லனாக நடித்து வருகிறார். 2025அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Trending News