வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாய்ஸ் டீமை ரவுண்டு கட்ட வரும் வைல்ட் கார்டு என்ட்ரி.. ஆஹா சாத்தான் சைக்கிள்ல வருதே, பிக்பாஸ் 8

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகிவிட்டது. பாதி கிணறு தாண்டிய நிலையில் கூட இன்னும் ஆட்டம் சுவாரஸ்யமாகவில்லை. இதை வாராவாரம் விஜய் சேதுபதி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்.

ஆனால் வீட்டில் இருப்பவர்கள் தினம் தினம் ஒரு மனநிலையில் இருந்து பார்வையாளர்களை நொந்து போக வைக்கின்றனர். அதற்கேற்றார் போல் கொடுக்கப்படும் டாஸ்க்கும் பெரிய சுவாரசியத்தை கொடுக்கவில்லை.

இதற்கு போட்டியாளர்களும் ஒரு காரணம். சரி வைல்ட் கார்டு வந்தாலாவது ஆட்டம் மாறுதா என பார்ப்போம் என பிக் பாஸ் ஆறு பேரை உள்ளே தள்ளி விட்டார். ஆனால் அதுவும் வேலைக்காகவில்லை. ஒருவர் கடந்த வாரம் வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் உள்ளே வர இருக்கிறார்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரும் அர்னவ்

ஆனால் இது பலரும் எதிர்பார்த்ததுதான். அதன்படி மேடையில் அவமானப்பட்டு வெளியேறிய அர்னவ் மீண்டும் வீட்டுக்குள் வர இருக்கிறார். இன்று விஜய் சேதுபதி வரும் எபிசோடில் அது காட்டப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஆண்களுடன் இவருக்கு கடும் தகராறு இருக்கிறது. போகும்போது கூட இவர் தன் மொத்த வன்மத்தையும் கொட்டி விட்டு தான் சென்றார். அப்படி இருப்பவர் மீண்டும் வீட்டுக்குள் வந்தால் நிச்சயம் ஒரு பிரளயம் நடக்கும்.

இதன் மூலம் சில கண்டன்ட் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி அடிதடி என்ற ரேஞ்சுக்கு கூட போகலாம். அப்படிப்பட்ட ஆள் தான் அர்னவ் . இப்படி பிக் பாஸ் போட்ட கணக்கு எப்படி என வரும் நாட்களில் பார்ப்போம்.

Trending News