ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

புத்தாண்டு கொண்டாட்டமாக சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்.. கில்லி போல் தட்டி தூக்கிய விஜய் டிவி

Vijay TV: விழாக்காலம் என்றாலே கொண்டாட்டத்தோடு சேர்த்து டிவி சேனல்களில் என்ன புது படம் போடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து விடும்.

இதை நிஜமாகவே அதிக சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடைசி தலைமுறை 90ஸ் கிட்ஸ்கள் என்று கூட சொல்லலாம்.

இப்போதைக்கு பார்த்த படத்தை மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்போம் நல்ல வாய்ப்பாக சேனல்களில் போடும் படங்கள் ஆகிவிட்டது.

அப்படி வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை எந்தெந்த சேனல்களில் என்ன புது படங்கள் போடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்

விஜய் டிவி: புத்தாண்டு கொண்டாட்டமாக விஜய் டிவி கில்லி போல் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இறக்கி இருக்கிறது.

காலை 11:30 மணிக்கு ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் மற்றும் மதியம் 3 மணிக்கு மகாராஜா படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீ தமிழ்: ஜீ தமிழ் சேனலில் மூன்று படங்களை போட இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

11.30 மணிக்கு அயலி படமும் மதியம் மூன்று மணிக்கு ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

கலைஞர் டிவி: கலைஞர் டிவியில் இன்று இரவு பத்து மணிக்கு விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

நாளை காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் பிடி சார் படமும் மதியம் மூன்று மணிக்கு ஜெய் பீம் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

சன் டிவி: சன் டிவி சேனல் இந்த முறை புத்தாண்டுக்கு புதிய படங்கள் எதையும் ஒளிபரப்பவில்லை. காலை 11 மணிக்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதேபோன்று மதியம் இரண்டரை மணிக்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending News