சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

புதுமண தம்பதியர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் சொத்து மதிப்பு.. புளியங்கொம்பை பிடித்த சித்தா

Siddharth and Aditi Rao: சித்தார்த் மீது தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அதிதி ராவுடன் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணத்தையும் பண்ணிக் கொண்டார். இவர்களுடைய திருமணம் கமுக்கமான முறையில் நடந்தாலும் அதற்கு முறைப்படி கமலஹாசன் வீட்டிற்கு கூப்பிட்டு தடபுடலான விருந்தை வைத்து அசத்தி விட்டார்.

தற்போது புதுமண தம்பதிகளாக இருக்கும் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் அதிதி-க்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் சொந்த வீடு இருக்கிறது. மேலும் பிராண்ட் அம்பாசிடர் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் மாதம் 40 லட்ச ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

அத்துடன் Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இந்த கார்களின் மொத்த மதிப்பு 4 கோடி அளவிற்கு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு படங்களில் நடிப்பதற்கு 1 கோடி முதல் 40 லட்சம் சம்பளம் வரை பெறுகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 60 கோடி அளவிற்கு சொத்து மதிப்பை வைத்திருக்கிறார்.

பிரமிக்க வைக்கும் சித்தார்த்தின் சொத்து மதிப்பு

மேலும் சித்தார்த்தின் சொத்து மதிப்பு மொத்தமாக 70 கோடி இருக்கிறது. ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னையில் வீடு இருக்கிறது. அத்துடன் இவரிடம் Rolls royce, பென்ஸ், ஆடி A4 போன்ற சொகுசு கார்கள் இருக்கிறது.

அத்துடன் ஒரு படத்துக்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அது போக டப்பிங் வாய்ஸ் ஆர்டிஸ்ட், சிங்கர், விளம்பரம் மாடல் போன்ற பல வித்தைகளையும் செய்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் 11 கோடி வரை சம்பாதித்து வருகிறார். இருந்தபோதிலும் இவரை விட சொத்துக்கும் வசதிக்கும் எந்தவித குறைச்சலும் இல்லாத அதிதி ராவை கரம் பிடித்து செட்டில் ஆகிவிட்டார்;

Trending News