வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பின் கழுத்தில் டாட்டூ குத்திய நயன்தாராவின் ரகசியம்.. எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும் விக்கி!

சுதந்திர பறவை போல் நாடெல்லாம் சுற்றி திரிகிறார்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. கடந்த ஜூன் 9-ஆம் தேதி மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் கொண்டாட இருவரும் சென்றிருந்தனர்.

அதன்பின்பு தங்களது வேலைகளில் பிசியாக இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது ஒரு பிரேக் எடுத்து பார்சிலோனாவில் வலம் வருகிறார்கள். தனக்கான நேரத்தை ஒதுக்கி நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் நேரங்களை செலவிட்டு வருகிறார்.

Also Read : 37 வயதிலும் ரோமியோ ஜூலியட்டை மிஞ்சும் நயன்-விக்கி ஜோடி.. திகட்டாத ஹனிமூன் புகைப்படங்கள்

மேலும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை அழகாக விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்த தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரொமான்டிக் புகைப்படம் தினமும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா புதிதாக தன்னுடைய பின் கழுத்தில் டாட்டூ குத்தி இருக்கிறார். அதாவது பின் கழுத்தில் டாட்டூ குத்துவது மிகக் கடினமாம். ஆனாலும் சிரமப்பட்ட நயன்தாரா அந்த டாட்டுவை போட்டுள்ளார். அதில் என்ன எழுதி இருக்கிறார் என்பது தற்போது வரை தெரியவில்லை.

Also Read : பொண்டாட்டிக்கு சுத்தி போடுங்க விக்கி.. ஹனிமூன் புடைபடங்களை டிரண்டாக்கும் நயன்தாரா!

நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது தனது கையில் பிரபு என டாட்டூ குத்தி இருந்தார். அதன் பின்பு அவருடன் பிரேக்கப் ஆன நிலையில் அதை பாசிட்டிவ் போல மாற்றி இருந்தார். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்க கூடாது என்பதற்காக முன்பே யோசித்து பின் கழுத்தில் டாட்டூ குத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா என்ன டாட்டூ குத்தி இருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் பெரும்பாலும் டாட்டூ தெரியாதவாறு உள்ள நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டு வருகிறார்.

Also Read : 2வது ஹனிமூனில் படு கிளாமராக நயன்தாரா.. சத்தமே இல்லாமல் ஒரு முத்தம்

இதுபோன்ற கழுத்தில் பச்சை குத்தியவர்கள் சவாலான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாம். மேலும் பழைய அனுபவங்கள் மூலம் நயன்தாரா தற்போது ஒவ்வொரு விஷயத்தையும் முன்கூட்டியே திட்டமிட்ட செய்து வருகிறார்.

Nayanthara-tatoo
Nayanthara-tatoo

Trending News