செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய 5 ஹீரோயின்கள்.. பிக் பாஸை ஆயுதமாக பயன்படுத்திய ரெண்டு பேர்

Tamil Actresses: தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டும் விதமாக செய்தி வாசிப்பாளராய் இருந்து அதன்பின் சினிமாவில் இறங்கி கலக்கிய நடிகைகள் ஏராளம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய இந்த ஐந்து செய்தி வாசிப்பாளர்கள் இளசுகளின் மனதை கவர்ந்து, சினிமா வாய்ப்புகளையும் பெற்றிருக்கின்றனர். அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் கலக்கிய 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ப்ரியா பவானி சங்கர்: புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து, அதன் பின் சினிமாவிலும் மேயாத மான் என்னும் படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு என்ட்ரி ஆனார். பின் டாப் ஹீரோக்களான தனுஷ், சிம்பு ஆகியோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியா: இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா தமிழ் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் செம பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. பிக் பாஸுக்கு பின் விளம்பரங்களில் நடித்த லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகி சினிமாவில் என்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அனிதா சம்பத்: சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை ஆயுதமாக பயன்படுத்திய அனிதா சம்பத், நினைத்தது போலவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. காப்பான், ஜங்கோ, மாஸ்டர் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து ‘தெய்வம் மச்சான்’ என்னும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

Also Read: 2025 வரை பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர்.. போட்டி போட்டு சிபாரிசு செய்யும் 2 ஹீரோக்கள்

திவ்யா துரைசாமி: துளிகூட மேக்கப் போடாமல் நேஷனல் பியூட்டியாக இளசுகளை கவர்ந்தவர் தான் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி. இவர் தொடக்கத்தில் சன் டிவி, நியூஸ் 7, தந்தி போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன் பின் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை முக்கிய கேரக்டரில் திவ்யா துரைசாமி நடித்தார்.

கண்மணி: சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி. இவர் தொடக்கத்தில் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, அதன் பின் நியூஸ் 18, காவேரி போன்ற பல தொலைக்காட்சிகளில் நியூ ரீடராக பணியாற்றினாலும், தற்போது சன் டிவியில் செய்தி வாசித்து வருகிறார். இவருக்கு சீரியல்களிலும் சினிமாவிலும் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் குவிக்கிறது. ஆனால் அதில் எல்லாம் எனக்கு ஆசை இல்லை என்று கூறி, தொடர்ந்து செய்தி வாசிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

Also Read: கைதியாக வந்து லவ்வராக மனதைத் தொட்ட கண்ணா ரவியின் 5 படங்கள்.. பிள்ளையார் சுழி போட்டு லோகேஷ்

Trending News