Rajini : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.
உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொதுவாக படம் ரிலீசுக்கு முன்பே சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்கப்படும். இந்நிலையில் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்போதே பிசினஸ் செய்துள்ளது.
அதாவது படத்தின் பட்ஜெட் 375 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரபலங்களின் சம்பளமே பட்ஜெட்டில் பாதியாக இருக்கிறது. கதையின் நாயகனான ரஜினிக்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 50 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.
ரஜினியின் கூலி படத்தில் பிசினஸ்
மேலும் எல்லா மொழியிலும் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அவர்களின் சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அமேசான் பிரைம் நிறுவனம் 130 கோடிக்கு கூலி படத்தை வாங்கி இருக்கிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் சாட்டிலைட் உரிமையை சன் டிவியை பெற்றுள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை 90 கோடி மற்றும் ஆடியோ உரிமை 20 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
ரிலீசுக்கு முன்னே கிட்டத்தட்ட 250 கோடி பிசினஸ் செய்துள்ளது. அதோடு கூலி படம் தியேட்டரிலும் மிகப்பெரிய சம்பவம் செய்ய இருக்கிறது. ஆகையால் இதன் வசூல் எப்படியும் 500 கோடியை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.