2026-ல் பீக் எதிர்பார்ப்பில் இருக்கும் 10 படங்கள்.. ஜனநாயகன் அரசியலை உச்சம் தொட்டிடுமா?

Vijay : 2025 இல் முதல் பாதியில் பெரிய படங்கள் வெளியான நிலையில் தக் லைஃப் போன்ற சில படங்கள் ஏமாற்றத்தை கொடுத்தது. இரண்டாம் பாதியில் இட்லி கடை, கூலி, பைசன், டியூட் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பத்து படங்களை பார்க்கலாம்.

முதலாவதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இருக்கிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டு மொத்த சினிமாவின் எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது இருக்கிறது.

இந்த வருடம் ரஜினியின் கூலி படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்த வருடம் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படம் வெளியாக இருக்கிறது. அதேபோல் அஜித்துக்கு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியானது.

2026 இல் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் 10 படங்கள்

2026 இல் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் AK64 படம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமலின் 237 வது படத்தை அன்பறிவு இயக்க உள்ளார். இந்த படமும் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

டாணாக்காரன் பட இயக்குனர் தமிழரசுடன் கார்த்தி கூட்டணி போட்டிருக்கும் மார்ஷல் படம் எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதேபோல் சூர்யாவின் 46, சிம்புவின் 49 மற்றும் தனுஷின் 54 படங்களும் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படமும் அடுத்த வருடம் தான் வெளி வர உள்ளது. மேலும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள சியான் 63 படம் 2026 வெளியாக இருக்கிறது.