ரஜினியுடன் நடிக்க மறுத்த 2 பிரபலங்கள்.. வெளிவந்த முழு ரகசியம்

Director : இன்று சினிமாவில் தனது கடுமையான உழைப்பால் ஜொலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் கதை ஆசிரியர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகம் கொண்டு சினிமாவில் கலக்கி வருகிறார்.

அச்சம் தவிர், அவியல், மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ போன்ற படங்களை இயக்கியதின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தார் லோகேஷ். தற்போது 350 கோடி பட்ஜெட் செலவில் ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 திரையில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.

சூப்பர் ஸ்டார் : இளசுகளில் தொடங்கி பெரியவர்கள் வரை அதிகம் ரஜினியின் ஸ்டைலை தான் விரும்புகின்றனர். இப்போது மட்டுமல்ல எப்போதுமே சூப்பர் ஸ்டாரின் படம் திரையில் வரும் என்றால் பாலபிஷேகம் செய்யாமல் ரசிகர்கள் ஒருபோதும் இருப்பதில்லை.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்து இருக்கும் ரஜினியின் திரைப்படம் வெளியானால் சும்மாவா இருக்கும். பல கொண்டாட்டங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு கூலி திரைப்படம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது.

ரஜினி என்ற பேச்சு எடுத்தாலே வலைதளத்தில் கூலி திரைப்படம் விமர்சனம் தான் உலாவி வருகிறது. “ஜெயிலர் படத்திற்கு அப்புறம் தலைவர் இந்த படத்தில் மாஸ் தான்”, ” 350 கோடி பட்ஜெட் இவர் படம் ஓடுமா ஓடாதா “. ” மோனிகா பாட்டு கேக்குதா” என பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் வலைத்தள பேச்சாளர்கள்.

வாய்ப்பை விட்ட நடிகர்கள்:

இந்நிலையில் கூலி திரைப்படத்தில் , சௌபினின் கதாபாத்திரத்திற்கு, முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் ஃபஹத் ஃபாசில்,ஜோஜு ஜார்ஜ் தான். ஆனால் சில காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.