3 பிரம்மாண்ட படங்களுக்காக தவிக்கும் இயக்குனர்கள்.. விக்ரம் நம்பியிருக்கும் சரித்திர காவியம்

பொன்னியின் செல்வன் போல் தமிழ் சினிமா இன்று வரை மூன்று பிரம்மாண்ட படங்களுக்கு தவம் கிடக்கிறது. தரமான இயக்குனர்கள் சரித்திர கால கதைகளை ரெடி பண்ணினாலும் கூட அந்த காவியங்களை உருவாக்க போதிய பட்ஜெட் இல்லாத நிலைமையில் இருக்கிறது.

500 கோடிகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே தரமான சரித்திர கால பிரம்மாண்ட படங்களை எடுக்க முடியும். இப்படி பணம் இல்லாமல் அப்பவே கமல் தன்னுடைய கனவு படமான மருதநாயகத்தை டிராப் செய்துவிட்டார். இந்த படம் ஆரம்பிக்கும் நேரத்தில் சிறப்பு விருந்தினராக குயின் எலிசபெத் வந்திருந்தார்.

கப்பலோட்டிய தமிழன், வீர சிவாஜி, அலிபாபாவும் 40 திருடர்களும் என பல சரித்திர கால படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு உண்டு. ஆனால் இன்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் பெரிய தொகை தேவைப்படுகிறது ,அப்படி இன்று வரை தமிழ் சினிமா எடுக்க முடியாமல் தவிக்கும் மூன்று படங்கள்.

வேள்பாரி: சங்கரின் கனவு படமான இதனை எடுப்பதற்கு 4 வருடங்களாக போராடி வருகிறார். வேள்பாரி நாவலை மையமாக கொண்ட கதைக்களம் , இதற்கு ரஜினி, கமல் என கதாபாத்திரங்களை தேர்வு செய்த போதிலும் சரியான தயாரிப்பாளர் அமையவில்லை.

சங்கமித்ரா: 5 வருடத்திற்கு முன்பே கொரோனா காலகட்டத்தில் இதற்கு அடித்தளம் போட்டார் இயக்குனர் சுந்தர் சி. ஆர்யா, விஷால் போன்றவர்கள் இதில் நடிப்பதாக இருந்தது. இதன் சம்பந்தமான போஸ்டர்கள் கூட வெளிவந்தது ஆனால் நீண்ட நாட்கள் கால் சீட் கொடுக்க வேண்டும் என ஹீரோக்கள் நிராகரித்து விட்டனர்.

தர்ம ராஜ்யா: இந்த சரித்திரகால படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. மலையாள சினிமா இயக்குனர் ஆர் எஸ் விமல் இந்த படத்தை இயக்குவதாக இருந்தார். ஏற்கனவே அவர் மகாவீர் கர்மா என ஒரு படத்தை இயக்கியிருந்தார். தர்ம ராஜ்யா படத்திற்கு பணம் அதிகம் தேவைப்படுவதால் நிலுவையில் இருக்கிறது.