Shivaji : சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய்யின் சச்சின் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது. ஜூலை 18ஆம் தேதி கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது.
இதுதவிர புதுவரவாக கிட்டத்தட்ட 11 படங்கள் வெளியாகிறது. பிக் பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம், கலையரசின் ட்ரெண்டிங் போன்ற படங்களும் வெளியாக உள்ளது. மேலும் ரீ ரிலீஸ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எம்ஜிஆர் நடிப்பில் 1975 இல் வெளியான படம் தான் இதயக்கனி. ஜெகநாதன் இந்த படத்தை இயக்கிய நிலையில் எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அப்போது இந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்றிருந்தது. இப்போது பல வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
இந்த வாரம் ரிலீஸாகும் 4 படங்கள்
எம்ஜிஆருக்கு போட்டியாக சிவாஜியின் படமும் வெளியாகிறது. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு சிவாஜி, வாணிஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் வெளியானது வசந்த மாளிகை படம். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் சிவாஜி கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த படம் தான் வேல். குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இப்போது இந்த படம் ரீ ரிலீஸ் ஆகுவது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த படம் தான் மெர்சல்.
இந்த படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்போது மெர்சல் படம் மீண்டும் தியேட்டரில் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.