Cinema : எந்த ஒரு சினிமா பின்புலம் இல்லாமலும் தமிழ் சினிமாவில் தனது கடுமையான உழைப்பால் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஐந்து நடிகைகளை பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
நயன்தாரா :
இவர் மிகப்பெரிய லேடி சூப்பர் ஸ்டார் என்று நாம் அறிந்தது. கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா. பெரிதாக அவர் குடும்பத்தில் யாருக்கும் சினிமா பின்புலம் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று உச்சத்தை தொட்ட பெரிய நடிகையாக வலம் வருகிறார்.
சாய் பல்லவி :
உனக்கு எந்த ஹீரோயின் ஃபேவரைட் என்று யாரை கேட்டாலும் முக்காவாசி நபர்கள் சொல்லுவது சாய் பல்லவி தான்.
ரொம்பவும் கடுமையான சமூகத்தைச் சேர்ந்தவர் சாய் பல்லவி. வீட்டில் இருக்கும் தடையை தாண்டி சினிமாவில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார். மேக்கப் போடாமலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அஞ்சலி :
நம் தமிழ்நாட்டு மதுரையிலிருந்து சினிமாவுக்கு வந்த ஒரு சாதாரண பெண் அஞ்சலி. சினிமாவில் சாதிப்பது தான் இவரது கனவு. ஆனால் இவர் குடும்பத்தில் யாரும் சினிமாவை நெருங்கியதில்லை. முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலி பின்பு அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
அமலாபால் :
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தார் அமலா பால். இவருக்கு எதிர்ச்சையாக முதல் திரைப்படம் வாய்ப்பு வந்தது. சாதாரண குடும்பம் என்பதால் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சினிமாவில் நடிக்க தடை செய்தனர். ஆனால் தைரியமாக திரையில் நடிக்க ஆரம்பித்தார். மைனா படத்தில் தனது பயணத்தை தொடங்கி மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார் அமலாபால்.
ஸ்ரீதிவ்யா :
எந்த சினிமா பின்பலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டிய என்னுடைய ஸ்ரீதிவ்யா. குடும்ப கஷ்டத்திற்காக முதலில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா காம்போ அபாரமான வெற்றியை கொடுத்தது. அந்தப் படத்தில் இருந்து ஸ்ரீதிவ்யாவிற்கு ஃபேன் பேஜ் அதிகமாகிவிட்டது.