Cinema : சிறந்த கல்வி மற்றும் தேவையான படிப்பு அறிவு இல்லை என்பதற்காக யாரையும் குறைத்து எடை போட முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் சினிமாவில் சாதித்த ஐந்து நடிகர்கள்.
ரஜினிகாந்த் :
பெங்களூரில் கண்டக்டராக இருந்த ரஜினி வெறும் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார் என்பது நம்மில் சிலருக்கு தெரியாத ஒன்று. தனது ஸ்டைலான நடையாளும் பேச்சாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். படிப்பு கைக் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கொண்டு சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றார் ரஜினிகாந்த்.
விஜயகாந்த் :
மேல் கல்வியை கற்காதவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால் சினிமாவில் நுழைந்து தனது நடிப்பில் இருந்த தெளிவால் முன்னேற்றம் அடைந்தார். மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். இவரைப் பார்த்தால் படிக்காதவர் என்று நிச்சயமாக எவராலும் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு டிப்டாப்பாக நடந்து கொள்பவர் கேப்டன்.
“பசி என்ற வருபவர்களுக்கு பசியாற்றாமல் விடமாட்டேன்” என்று உறுதி கொண்டு தான் உயிரோடு இருக்கும் வரை தனது இல்லம் தேடி வந்தவர்களுக்கு உணவு அளித்தவர். படிப்பு இல்லை என்றாலும் இறந்தாலும் கூட மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
கவுண்டமணி :
பள்ளிக்கூடத்தை கூட எட்டி பார்க்காத கவுண்டமணி சினிமாவில் பயங்கரமான வெற்றியடைந்தார். இவரின் நகைச்சுவைக்கு இன்னும் கோடிக்கணக்கான பேர் அடிமையாக தான் இருக்கிறார்கள். படிப்பு ஒன்று இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டிய நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.
நெப்போலியன் :
நெப்போலியன் படிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் அல்ல. ஆனால் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் உச்ச நிலையில் இருந்தவர் என்று சொல்லலாம். ஹீரோ முதல் வில்லன் வரை அனைத்து கதாபாத்திரங்ககளிலும் தனது திறமையை வெளிக்காட்டியவர். அதன்பின் அரசியலில் ஈடுபாடு கொண்டு அதிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார் நெப்போலியன்.
ரமேஷ் கண்ணா :
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ரமேஷ் கண்ணா படிப்பை தொடர முடியாவிட்டாலும், தனது சினிமா பயணத்தில் காமெடி செய்தே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆரம்ப காலகட்டங்களில் இவர் இல்லாத படமே இல்லை. அந்த அளவுக்கு நடிப்பு திறமையில் கலக்கட்டியவர்.