சாய் அபயங்கரால் சர்ச்சை.. வாய்ப்பு திறமைக்கா? பிறப்புக்கா?

Sai Abhyankkar: இசையமைத்து ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் சாய் அபயங்கர் கைவசம் எட்டு படங்கள் இருக்கிறது.  இவருக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கே பலரின் கேள்வி. 

அதிலும் நெட்டிசன்கள் வெளிப்படையாகவே இதை இப்போது விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இவருக்கு வாய்ப்பு குவியும் அளவுக்கு திறமை இருக்கிறதா என்பதற்கு சமீபத்தில் வெளியான கருப்பு டீசர் தான் உதாரணம்.

அது சிலருக்கு பிடித்திருக்கிறது. பல பேருக்கு பிடிக்கவில்லை. ஒரே இரைச்சலாக இருக்கிறது. ஜெயிலர் படத்தில் கேட்ட மியூசிக் போல் உள்ளது என்பது போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

சாய் அபயங்கரால் எழுந்த சர்ச்சை 

அப்படி என்றால் இவருக்கான வாய்ப்பு வருவதற்கு காரணம் இவர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலா என்ற கேள்வி தான் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. உண்மையில் இதுதான் காரணமா என்பதை இங்கு கொஞ்சம் அலசி பார்ப்போம். 

சினிமா துறை என்று மட்டும் இல்லை பிற துறைகளிலும் இப்படி ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் திறமை இருந்தாலும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

அப்படித்தான் இப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் இந்த பாகுபாடு இருக்கிறது. அதில் சாய் அபயங்கர் ஒரு படத்தில் தன்னுடைய திறமையை காட்டி அடுத்தடுத்து முன்னேறி இருந்தால் பரவாயில்லை. 

ஆனால் சிபாரிசு அடிப்படையில் அவருக்கு வாய்ப்புகள் வருவது நல்ல திறமைசாலிகளை முடக்குவதற்கு சமம். இவருடைய இசை ஆகா ஓகோ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 

ஆனாலும் ஏன் இவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். அவர் சமூகம் தான் இதற்கு காரணமா? வாய்ப்பு என்பது திறமைக்கா பிறப்புக்கா என்ற கேள்வியும் சர்ச்சையும் இந்த விஷயத்தில் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.