Roles : சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்த வசதியை விடவும் டெக்னாலஜி தற்போது வளர்ந்து விட்டது. அதிலும் AI வந்ததிலிருந்து சினிமாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் AA22xA6 என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுவும் இவர் 4 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தாத்தா, அப்பா இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுன் ஒரே ஆளே அப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் நடிக்கிறார்.
சினிமா வரலாற்றில் இது ஒன்னும் புதிது கிடையாது. ஏற்கனவே பல நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் பல வேடங்களில் நடித்திருக்கின்றன. பல்வேறு கதாபாத்திரங்களில் ஒரே நடிகராக நடித்த பிரபலங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
கமல் ஹாசன் :
சினிமாவில் உலகநாயகன் என்ற பெயர் பெற்ற கமலஹாசன் அவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை. ஒரே ஆளாக பல கெட்டப்பில் கமல்ஹாசன் நடித்திருப்பது மிகவும் வரவேற்கப் பெற்றது அது எந்த படம் என்றால் “தசாவதாரம்” தான். இந்த திரைப்படத்தில் சுமார் 10 கதாபாத்திரங்களின் வேடமிட்டு உலகப் புகழ்பெற்றார்.
இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது மட்டுமில்லாமல் மைக்கேல் மதன காம ராஜன் என்ற திரைப்படத்தில் 4 கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்திருக்கிறார் கமல்.
சிவாஜி கணேஷன் :
நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என தமிழ் சினிமா உலகம் போற்றும் மறைந்த நடிகர் சிவாஜி அந்தக் காலத்திலேயே நவராத்திரி என்ற திரைப்படத்தில் 9 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தெய்வமகன் என்ற திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் ஒரே ஆளாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் :
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று கொண்டு சும்மா இருப்பாரா ரஜினிகாந்த், மூன்று முகம் என்ற திரைப்படத்தில் தந்தை வேடமும் இரண்டு மகன்கள் வேடமும் ஒரே ஆளாக நடித்தார். இதே போல் ராஜாதி ராஜா திரைப்படத்திலும் மூன்று கதாபாத்திரங்களில் நடித்தார்.
விஜய் :
சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் தற்போது அரசியலில் இருந்தாலும் அவர் புகழ் சினிமாவில் மறையாது. விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பயங்கர வரவேற்பை பெற்றது. தந்தை, இரண்டு மகன்கள் என அச்சுப் பிறழாமல் நடித்திருப்பார் விஜய். இது ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பு பெற்றது.
சூர்யா :
சூர்யாவின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், பட்டையை கிளப்புவார். மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகளாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளி வந்த போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 24 திரைப்படத்திலும் மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.