சிம்பு, தனுஷ் ரகசியமாய் வளர்த்து விடும் குட்டி தம்பி.. பிளேபாய்க்கு ஆப்படிக்கும் வேலையை பார்க்கும் அட்லி

தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேஷன்கள் தலை தூக்க ஆரம்பித்து விட்டார்கள். ரஜினி, விஜய் சினிமாவில் தங்களது ஓய்வு முடிவை நோக்கி சென்றுவிட்டார்கள். மறுபக்கம் அஜித் ஸ்போர்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கமலும் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வருகிறார்.

இப்பொழுது தமிழ் சினிமாவை பொருத்தவரை சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். இதில் தனுஷ் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிசியாக இருக்கிறார்.

சிம்பு STR 49, 50 ,51என தன்னுடைய அடுத்தடுத்த கமிட்மெண்ட்டிற்காக அனைத்து வேலைகளையும் செய்து விட்டார். சிவகார்த்திகேயன். சூர்யா, ஜெயம் ரவி போன்றவர்களும் தொடர்ந்து தங்களின் அடுத்த படங்களை குறிவைத்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் பற்றாக்குறையாக இருப்பது இசையமைப்பாளர்கள். ஒரு படங்களுக்கு சுமார் 15 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார் கூட்டித்தம்பி அனிருத், அப்படி வாங்கிய போதிலும் அவரால் சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்து படத்தை வெளியிட முடியவில்லை.

இதனால் படங்கள் ரிலீஸ் தள்ளி இதனால் போகிறது. இப்பொழுது அனிருத்தை பல இளம் ஹீரோக்கள் ஒதுக்கி வருகிறார்கள். அவருக்கு பதிலாக புது இயக்குனர் சாய் அபயங்கரை வளர்த்து வருகிறார்கள். புதிதாய் தனுஷ், சிம்பு படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக சாய் கமிட்டாகி வருகிறார். இயக்குனர் அட்லீயும் அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் டிலே செய்கிறார் என சாய் அபயங்கரை தான் நியமித்துள்ளனர்.