கடைசி 15 நிமிஷம் ஸ்கிரீன் கிழியப்போகுது.. அடுத்த சஸ்பென்ஸை உடைத்த கூலி

coolie : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவரவிருக்கும் கூலி படத்தின் அப்டேட் வந்து தமிழகத்தையே சும்மா அதிரவைக்கிறது. ஒவ்வொரு அப்டேட் ஐ-யும் அடுத்து அடுத்து கொடுத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது கூலி டீம். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தாலே அனைத்து படமும் பெரும்பாலும் பெரிய வரவேற்பை பெறுகிறது.

சொல்லப்போனால் என் தலைவன் முகம் தான் “பிராண்ட்” என்கிற அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தாலே ரஜினிக்காகவே படம் பார்க்க செல்பவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளி வரவிருக்கும் கூலி படத்தின் செய்திகள் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கூலி படமானது வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன்,நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது இதுவரை தெரிந்த ஒன்று. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயற்றியுள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது மற்றும் அனிருத் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

கடைசி 15 நிமிஷம் ஸ்கிரீன் கிழியப்போகுது..

இதற்கு அடுத்த ட்விஸ்ட் ஆக இந்த படத்தில் அமீர்கான் அவர்கள் நடித்துள்ளதாக செய்தார்கள் வந்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமீர் கான் அவர்களுக்கு கூலி படத்தில் மிக முக்கியமான “கேமியோ” கதாபாத்திரம் என்றும் “15 நிமிடம் ஸ்கிரீன் கிழியப்போகிறது” என்றும் செய்திகள் வலம் வருகின்றன.

இந்த படத்திற்கு முன்பாக ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் இணைந்து 1995 ஆம் ஆண்டு “Aatank Hi Aatank” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் காட்சிகள் பிரபலமாக பேசப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது ரஜினிகாந்த் அவர்களுக்கு 171 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு உபேந்திரா அவர்கள் தமிழில் நடித்துள்ளார் எனபது சிறப்பம்சம். இது போல எக்கச்சக்க சிறப்பம்சம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு அமீர்கான் மட்டும் ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணி போட்டுள்ளார்கள். எனவே இந்த கூட்டணி படத்தில் ஹிட் ஆகுமா என எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்து வருகின்றன.