தெலுங்கில் ராஜமௌலி மட்டும் தான்.. தமிழில் லிஸ்ட் போட்ட அமீர்கான்

Aamir Khan : அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் சித்தாரே ஜமீன் பர் படம் வெளியாகி இருந்தது. இவர் இப்போது தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் லோகேஷ் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் அமீர்கான் நடிக்க இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்களை பற்றி பேசி இருக்கிறார். முன்பே மணிரத்னம் கதை சொல்லும் பாணியும் மற்றும் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தையும் அமீர்கான் பாராட்டி இருக்கிறார்.

இப்போது தமிழில் இளம் இயக்குனர்களை பற்றி அவர் பேசி இருப்பது கவனம் பெற்று இருக்கிறது. அதாவது தெலுங்கு சினிமாவை பொருத்தவரையில் ராஜமௌலி மட்டும் தான் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இருக்கிறார்.

தமிழ் இயக்குனர்களை பெருமையாக பேசிய அமீர்கான்

ஆனால் தமிழ் சினிமாவில் நெல்சன், லோகேஷ், அட்லீ என லிஸ்ட் போட்டு கூறி இருக்கிறார். நெல்சன் ரஜினிக்கு ஜெயிலர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இப்போது ரஜினியை வைத்து எடுத்திருக்கும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அட்லீ பாலிவுட் வரை சென்று ஜவான் படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் படத்தை கொடுத்திருந்தார். இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் படம் உருவாகி வருகிறது‌.

இவ்வாறு தமிழ் இயக்குனர்களின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் இது போன்ற இயக்குனர்கள் இல்லாததால் ஹீரோக்களுக்கு பெரிய ஹிட் கிடைக்கவில்லை என்பதை அமீர்கான் கூறி இருக்கிறார்.