SJ surya : சினிமாவில் எஸ்.ஜே சூர்யாவுக்கு என நிறைய ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றனர். அவரது அரக்கத்தனமான நடிப்பு அனைவரையும் கட்டிபோட்டு வைத்தது என்று சொல்லலாம். ஆனால்இவர் நடித்து வரும் எல்லா கதாபாத்திரமும் வில்லன் தான்.
தற்போது இவர் கொடுத்திருக்கும் பேட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.ஜே சூர்யா கூறியதாவது “எனக்கு கிட்டத்தட்ட 7 திரைப்படங்கள் ஹீரோ வாய்ப்பு வந்தது. ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி இல்லை.
அந்த கதை என்னை சந்தோஷப்படுத்தவில்லை. அதாவது மாநாடு கதை கேட்கும் போது எனக்கு சந்தோஷமா இருந்தது. இறைவி பட கதை கேட்கும் போதும் சந்தோஷமா இருந்தது. ஸ்பைடர் கதை கேட்கும் போது சந்தோஷமா இருந்தது.
எதில் எனக்கு சந்தோசம் கிடைக்கிறதோ? அதுதான் சரியான கேரக்டர் என எனக்கு புரிந்தது. அதனால் எனக்கு சந்தோசம் தரும் ப்ராஜெக்ட்டை மட்டும் பண்ணனும் நினைத்தேன்”. எஸ் ஜே சூர்யா இப்படி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால் உண்மையிலேயே எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படத்தை விட வில்லனாக நடித்திருக்கும் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். ஒரு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தால் போதும் அந்த படம் தான் ஹிட் என்பது போல ஆகிவிட்டது.
அதனாலே ஒரு வேலை இந்த மாதிரி வில்லன் கதாபாத்திராத்தை தேர்வு செய்கிறாரா? என்று தெரியவில்லை. ஹீரோவாக 7 திரைப்படங்களில் நடிக்க வைக்க காத்துக் கொண்டிருக்கிறனர் என்று பேசியது நடிகர்களின் மத்தியில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.