Vishal : விஷால் மேடையில் பேச தொடங்கிய போது ஏற்பட்ட கை நடுக்கத்தில் இருந்து, அனைவரும் கலாய்க்க தொடங்கினர். அன்றிலிருந்து சமூக வலைத்தளத்தில் ஒரே விஷால் புராணம் தான். உடம்பு சரியில்லையா என்ற கேள்வி விஷாலை மிகவும் புண்படுத்தியது.
சில நாட்களில் மீண்டும் ஒரு மேடையில் மயக்கம் போட்டு விழுந்தது, இன்னுமும் ரசிகர்களை பதட்டமடைய செய்தது மற்றும் விமர்சனங்களுக்கு வலைத்தளங்களில் பஞ்சமே இல்லாமல் ஆகிவிட்டது. மீண்டும் பல இன்னல்களை சந்திக்க தொடங்கினார் விஷால்.
நெக்ஸ்ட் பிளான் ரெடி..
சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான விஷால், தற்போது ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். கல்யாணத்துக்கு நாள் குறித்து இருந்தாலும், அதே கையோடு இப்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.
விஷாலின் இந்த 35 வது திரைப்படத்தில் துஷாரா விஜயன் இணைகிறார். ரவி அரசை இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் முதல் நாள் பட சூட்டிங் பூந்தமல்லியில் நாளை தொடங்க உள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் ஜீவி பிரகாஷின் இசை இருப்பதுதான் ஹைலைட்.
நடிகர் சங்கத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விஷால் தற்போது பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஆளானது, சினிமாவயே அதிர வைத்தது. ஒரு டாப் ஹீரோக்கு இந்த நிலைமையா? என்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது விஷால் களம் இறங்கி இருக்கும் திரைப்படம் நிச்சயம் வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் திரைப்படத்தில் களமிறங்கிய விஷாலுக்கு ரசிகர்கள் இன்னும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.