டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டிய ஜோதிகா.. 45 வயதில் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

Actress Jyothika : தனது அக்கா நக்மா மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகை ஜோதிகா. ஆனாலும் தன்னுடைய அபரிவிதமான நடிப்பால் ரசிகர்களை மிக எளிதில் கவர்ந்தார். இதனால் அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைக்கான இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஜோதிகா ஒதுங்கியிருந்தார். இப்போது அவர்களது குழந்தை வளர்ந்த உடன் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் தனது குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகி உள்ளார்.

இந்நிலையில் டாப் ஹீரோயின்களையே ஓரம் கட்டும் அளவிற்கு ஜோதிகாவின் சொத்து மதிப்பு இருக்கிறது. அதாவது 45 வயதில் 335 கோடி மதிப்பிலான சொத்துக்கு அதிபதியாக ஜோதிகா இருக்கிறார். அதாவது தனது கணவர் சூர்யாவுடன் ஜோதிகாவும் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்

இதுதவிர விளம்பரங்களில் இருந்தும் ஜோதிகாவுக்கு நிறைய வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பாலிவுட்டில் இருந்தும் ஜோதிகாவுக்கு இப்போது எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சென்னையில் பிரம்மாண்ட வீடு ஜோதிகா பெயரில் உள்ளது.

அதேபோல் மும்பையிலும் சுமார் 70 கோடி மதிப்பிலான பிளாட் உள்ளது. மேலும் ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய ஆடம்பரக் கார் வகைகளையும் ஜோதிகா வைத்துள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் பிஸியாக மற்றும் ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகளுக்கு கூட இவ்வளவு சொத்து மதிப்பு இருக்குமா என்பது சந்தேகம்தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →