பத்து வருடத்திற்கு கிடைத்த தவமாய் தற்போது வெங்கட் பிரபுவிற்கு வரப்பிரசாதம் போல் தளபதி 68 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படத்திலும் யுவன் சங்கர் ராஜாவும் கண்டிப்பாக இடம் பெறுவார். ஆனால் தளபதி 68 படத்தில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பரிந்துரைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் ‘ஆஆஆஆஆ’ , ‘ம்ஹ்ம்ம்ம்’, ‘லலலலலலல’ இதுபோன்ற வழக்கமான கோரஸ் சவுண்ட் தான்கேட்டு கேட்டு காது புளித்து போனது.
ஆனால் அதை முற்றிலும் ஆக மாற்றி ஹாரிஸ் ஜெயராஜின் கோரஸ் ஓசைகளாக அமைந்தது. ஓமாகசீயா வோஹியாலா, மெகுமெகுமெகு லாஹி மாஹிமோ, சோலேயோ ஓ சோனோலேயோ போன்றவை எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த கோரஸ் குரல்கள் இளசுகளை முணுமுணுக்க வைத்தது.
இவ்வாறு ஹாரிஸ் ஜெயராஜ் நல்ல திறமையான இசையமைப்பாளர். ஆனால் இப்பொழுது அவருடைய மார்க்கெட் கொஞ்சம் டவுன் ஆகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முழு காரணமும் அவர்தான். புகழின் உச்சத்திற்கு போன பின்பு தரமான படங்கள் எது என்பதை தேர்வு செய்யாமல் சம்பளத்தில் தான் குறியாக இருந்திருக்கிறார்.
அதனால் தான் இப்போது தளபதி 68 பட வாய்ப்பு அவரை விட்டுச் சென்றது. ஏஜிஎஸ்- பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான படம் லவ் டுடே. இது கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படம். இந்த படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் தான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அவர் கிட்டத்தட்ட ஏழு கோடிகள் சம்பளம் கேட்டு இருக்கிறார்கள். பட்ஜெட்டே இந்த பணத்திற்கு அவ்வளவுதான் என நிராகரித்துள்ளது ஏஜிஎஸ். இப்பொழுது அதே போல் தளபதி 68க்கும் யுவன் சங்கர் ராஜாவை லாக் செய்து, ஹாரிஸ் ஜெயராஜுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டனர்.