குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட கூடாதுன்னு பல்ஸ் பிடிக்கும் அட்லீ.. யோசிக்கவே முடியாத லெவலில் கருஞ்சிறுத்தை

ஒரு காலத்தில் இயக்குனர் அட்லீயை “copy cat” என வர்ணித்தவர்கள் இங்கே ஏராளம். இவர் இயக்குகிற படங்கள் எல்லாம் இன்னொரு படத்தின் கதை போல இருக்கிறது என ஒப்பிட்டு பார்த்து இவரை மட்டம் தட்டி வந்தார்கள். இப்படி ஆரம்பத்தில் அவர் கடந்து வந்த கஷ்டங்கள் ஏராளம்.

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதற்கு பிறகு தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து மட்டும் மூன்று படங்கள் இயக்கி வெற்றி கண்டார். இதில் ராஜா ராணி படத்தை மணிரத்தினத்தின் மௌன ராகம் படத்தோடு ஒப்பிட்டார்கள்.

அடுத்து இவர் இயக்கிய தெறி மற்றும் மெர்சல் படங்களை விஜயகாந்தின் சத்திரியன், கமலின் அபூர்வ சகோதரர்கள் என மாறி மாறி பேசி இவருக்கு குடைச்சல் கொடுத்தார்கள். ஆனால் அதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். அம்பானி, ஷாருக்கான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு இன்று மிகவும் நெருங்கிய நண்பராக வலம் வருகிறார்.

இப்பொழுது அடுத்த சட்டத்தையும் எட்டிப் பிடித்துள்ளார். அல்லு அர்ஜனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் ஐந்து ஹீரோயின்கள், அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனுக்கு அதில் இரண்டு கெட்டப்புகள். படத்துக்கு வில்லனாக ஹாலிவுட் ஆக்டர் வில் ஸ்மித்தை பேசி வருகிறாராம்.

இப்படி யாருமே யோசிக்காத ஒரு கூட்டணியை செய்து நாம் தனித்துவம் காட்ட வேண்டும் என போராடி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோன், மிர்னால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் பாக்கிய ஸ்ரீ போஸ்( கிங்டம் படத்தில் நடித்தவர்). இவ்வாறு இதுவரை இல்லாத ஒன்றை யோசித்து அசத்தி வருகிறார் அட்லி.