Jio Hotstar : இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பாலிவுட்டில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
பறந்து போ
முதலாவதாக மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி இருந்தது பறந்து போ படம். அப்பா, மகன் இடையே உணர்ச்சி பூர்வமான கதைகளத்தை கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
The Yoghurt Shop Murders
ஆங்கிலத்தில் உருவான டாகுமெண்டரி படம் தான் இது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 4 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பெரும்பான்மையான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
Love Hurts
லவ் ஹர்ட்ஸ் படத்தில் மேத்யூ முர்ரே, ஜோஷ் ஸ்டோடார்ட் ஆகியோர் நடிப்பில் ஆக்சன் கலந்த காமெடி படமாக வெளியாகி இருந்தது. இப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
Mickey17
மிக்கி 17 படம் சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகி இருந்தது. மிக்கி 7 என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் இப்போது ஜியோ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.
Salakaar
சலகார் சீரிஸாக வெளியாகி வருகிறது. இதில் அஸ்ரார் கான், நவீன் கஸ்தூரியா, ஜான்ஹவி ஹர்தாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த தொடர் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.