Vishal : விஷால் கிருஷ்ணன் ரெட்டி என்று தனிப்பட்ட பெயர் இருந்தாலும், சினிமாவில் விஷால் என்ற ஒத்த பெயரை வைத்து தமிழ் சினிமாவையே ஆண்ட நாயகன். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் விஷால்.
இவரது தந்தை ஜி.கே.ரவி பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் என்றாலும் தந்தை பெயரை வைத்து வராமல் தன் உழைப்பால் உச்சத்தை அடைந்தவர். 2004 இல் செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்பு “செல்லமே” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானர் விஷால்.
தொடர் பயண வெற்றிகள்..
தனது முதல் படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரபரணி, அவன் இவன், இது போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். சண்டக்கோழி திரைப்படம் அபாரமான வெற்றியை கொடுத்ததால், 2018ல் சண்டக்கோழி 2 திரைப்படத்தை இயக்கி முடித்தார் N.லிங்கசாமி.
விஷாலின் பல போராட்டங்கள்..
சினிமா மட்டும் வாழ்க்கை என்று கருதிய விஷால், சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். பட வெளியீட்டு பிரச்சனைகள், தியேட்டர் உரிமைகள் என சினிமாவில் ஏற்பட்ட பல பிரச்சனைகளை எதிர்த்திருக்கிறார் விஷால்.
விஷாலுக்கு ஏற்பட்ட நிலை..
இப்படி தன்னை சினிமாவுக்கு என்று அர்ப்பணித்த விஷால் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். ” இவர் முகம் ஒரு சைடு இருக்கு, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு, ஸ்கிரீனுக்கு செட் ஆகுமா? ” என்று பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விஷாலின் உடலை வைத்து பட வாய்ப்பு தர மறுத்துள்ளனர்.
R. B சவுத்ரி அப்போது விஜயின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற திரைப்படங்களை ஹிட் கொடுத்து வந்த நேரம். விஷாலுக்கு எல்லாரும் வாய்ப்பு கொடுக்க தயங்கிய போது விஷாலை பார்த்து ஆர். பி சவுத்ரி சொன்ன விஷயம் ” இவன் நிச்சயமா ஹீரோவாக வருவான். உள்பக்கம் இருக்கிற நம்பிக்கை அந்த மாதிரி “. விஷால் மேல் நம்பிக்கை வைத்து தான் 2004 இல் செல்லமே திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சவுத்ரி.