தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் அவருடன் இணைந்து சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருவதுதான்.
சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படம் பாதிக்கு மேல் முடிந்த நிலையில் புது பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. அதாவது இந்தப் படத்தின் டைரக்சன் வேலைகளில் தனுஷின் தலையீடு அதிகமாக இருக்கிறதாம்.
பொதுவாகவே முன்னணி ஹீரோக்கள் பலரும் இயக்குனர்களின் வேலைகளில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லி குட்டையை குழப்புவார்கள். இது நன்றாக வந்து கொண்டிருக்கும் படத்தையே சொதப்பிவிடும் அளவுக்கு செல்லும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது அப்படி ஒரு விஷயம் தான் கேப்டன் மில்லரிலும் நடந்து வருகிறது.
தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர். அதனாலேயே அவர் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் இயக்குனரின் வேலையையும் சேர்த்து பார்க்கிறாராம். அந்த வகையில் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது பாதிக்கிணறு தாண்டிய நிலையில் தனுஷால் தத்தளித்து வருகிறது.
இதனால் இயக்குனர் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவனை வைத்து அவர் சாணி காகிதம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதிலும் கூட செல்வராகவனின் தலையீடு அளவுக்கு அதிகமாக இருந்ததாம். அதன் காரணமாகவே அப்படம் சொதப்பியது என்ற குற்றச்சாட்டு இப்போது வரை இருக்கிறது.
அதைத்தொடர்ந்து தம்பியும் இப்போது இயக்குனருக்கு குடைச்சல் கொடுத்து வருவது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இருப்பினும் கேப்டன் மில்லர் திரைப்படம் இயக்குனருக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்பதால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறாராம். இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.