கிங்காங்கை அலட்சியப்படுத்திய பிரபலங்கள்.. வெற்றிடத்தை நிரப்பிய முதல்வர்

Kingkong: நடிகர் கிங்காங் தன் மகளுடைய திருமணத்தை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடித்து விட்டார். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே பத்திரிக்கை வைக்கும் வேலையில் அவர் பிசியாக இருந்தார்.

திரையுலகின் அத்தனை நடிகர்களுக்கும் அவர் நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்தார். அப்போது எடுத்த போட்டோக்களையும் ஆசையோடு தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார்.

அதை பார்க்கும் போது எல்லாரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவாங்க என நமக்கே தோன்றியது. ஆனால் சிலரை தவிர எதிர்பார்த்த பல முக்கிய நடிகர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியான விஷயம் தான்.

இது ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். அதிலும் முதல்வர் நேரில் வருகை தந்து திருமண ஜோடியை வாழ்த்தியது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

வெற்றிடத்தை நிரப்பிய முதல்வர்

அரசியல் பணிகள் அவ்வளவு இருந்தும் கூட பத்திரிக்கை வைத்த மரியாதைக்காக அவர் வந்தது பாராட்டப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் கிங்காங் அதிமுகவை சேர்ந்தவர். அதை எல்லாம் மனதில் வைக்காமல் நேரில் அழைப்பு விடுத்ததற்காகவே முதல்வர் வந்து வாழ்த்தி சென்றுள்ளார்.

உண்மையில் திரையுலகச் சேர்ந்த பிரபலங்கள் வராத வெற்றிடத்தை சிஎம் வருகை நிரப்பிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் இன்றி பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தர்ராஜன் என எல்லோரும் வந்திருந்தார்கள்.

அதிலும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிங்காங்கை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது கலகலப்பாக இருந்தது. இப்படியாக திரையுலகில் இருந்து வரவில்லை என்றாலும் அரசியல் பிரமுகர்களின் வருகையால் கிங்காங் வீட்டு திருமணம் கலை கட்டியது.